ஜப்பானில் நீல விளக்கு!



இந்தியாவில் ட்ராஃபிக் விளக்குகள் பச்சை, மஞ்சள், சிவப்பு  என  டிசைன் செய்யப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. ஆனால் ஜப்பானில் பச்சை விளக்குக்கு பதில் நீல நிறம் பயன்படுத்தப்படுகிறது. காரணம், ஜப்பான் மொழிதான். நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் மொழியில் நான்கு அடிப்படை நிறங்களுக்கான வார்த்தைகளே இருந்தன.

பச்சை என்றால் நீல நிறத்தைக் குறிக்கும்  வார்த்தையான ‘Ao’ பயன்  படுத்தலாம்.  மில்லினியத்தில்  பச்சையைக்  குறிக்க ‘midori’ (நீலநிற சாயல்)  என்ற வார்த்தை உதவுகிறது.1973 ஆம் ஆண்டு நீலநிற விளக்கை  போக்குவரத்து சிக்னல்களில் பயன்படுத்துவதற்கான சட்டத்திருத்தத்தை ஜப்பான் அரசு முன்மொழிந்த ஆண்டு தொடங்கி இன்றுவரை நீலநிறவிளக்கு அந்நாட்டு சிக்னலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.