ரோலர் கோஸ்டர் பயணம் மக்களை ஈர்ப்பது எப்படி?ஏன்?எதற்கு?எப்படி?

மைக்ரோ விஷயங்களிலும் த்ரில்லை எதிர்பார்க்கும் சாகச விரும்பிகள் இதனை ரசிப்பார்கள். ரோலர்கோஸ்டர் பயணத்தில் மனதில் திடுக் என ஏற்படும் அட்ரினலின் பீறிடலோடு பயத்தை ரசிப்பதால், அந்த அனுபவத்துக்கு வார்ம் வெல்கம் சொல்கின்றனர்.

பேய் படங்களைப் பார்ப்பது, அதிக காரம் கொண்ட மிளகாயை சாப்பிடுவது என எதையும் எக்ஸ்ட்ரீமாக செய்யும் இந்த தன்மைக்கு Benign Masochism என்று பெயர். இதிலும் திருப்தி ஏற்படாதவர்கள், இன்னும் ஆபத்து நிறைந்த பிற விளையாட்டுகளில் ஈடுபட்டு ஆத்மாவுக்கு நிம்மதி தேடுகிறார்கள்.

Mr.ரோனி