ஃப்ளாஷ்பேக் விளம்பரங்கள்



இந்தியாவில் 70 ஆண்டுகளில் நம்மை ரசிக்கவைத்த விளம்பரங்களில் சில... லக்ஸ் (1941)1941 ஆம் ஆண்டு லீலா சிட்னிஸ் அறிமுகப்படுத்திய சோப். JWT தயாரித்த விளம்பரம் இது. லக்ஸ் விளம்பரத்தில் நடிப்பதே பெரும் கௌரவம் என கருதப்படும் இதில் நடித்த ஆண்கள் ஷாரூக்கான் மற்றும் அபிஷேக் பச்சன் மட்டுமே.

லைஃப்பாய் (1961)

ஆற்றில் நாம் குளித்து, துணி துவைத்து, கூடவே வரும் செல்ல நாய்க்கும் தேய்த்து குளிப்பாட்டினாலும் கரையாத சோப். ‘Tandurusti ki raksha karta hai Lifebuoy; என்ற அட்டகாச ஜிங்கிள் டிவி,தினசரி என இரண்டிலும் பட்டை கிளப்பியது. விளம்பரத்துக்கு பொறுப்பு லோவ் லிண்டாஸ்.

அமுல் பட்டர் (1966)

தற்போதைய நிகழ்வுகளை காமெடியாக அமுல் பட்டரை பிரெட்டில் தடவியபடியே பேசும் சுட்டி சிறுமியை மறக்க முடியுமா? இச்சிறுமியை உருவாக்கியவர்கள் Sylvester da Cunha, Eustace Fernandes.

லிரில் (1975)

கரேன் லுனெல் என்ற மாடல் பெண் க்ரீன் பிகினியில் லா. இலா... என அருவியில் நனைந்து பாடியபோது இந்தியாவே ஹார்ட்பீட் எகிற பரவசமானது. பின்னாளில் ப்ரீத்தி ஜிந்தா இதில் கெட்ட ஆட்டம் போட்டார். லோவ் லிண்டாஸ் தயாரிப்பு.