செக்ஸ்பாட் வந்தாச்சு!



ரோபாட்டுகள் என்றால் உடனே டெர்மினேட்டர் அல்லது ஐரோபாட் பயங்கரங்களோ அல்லது சயின்ஸ் எழுத்துக்களின் ராஜேஷ் குமாரான ஐசக் அஸிமோவின் கதைகளோ நினைவுக்கு வரும். ஆனால் தினசரி வாழ்வில் ரோபாட்டுகள் பங்குபெறத் தொடங்கி விட்டன.

எப்படி? ரோபாட்டுகளை மேரேஜ் செய்யும் சிச்சுவேஷன் இன்று. உலகம் முழுக்க தத்ரூபமாக பெண் ரோபாட்டுகளை தயாரிக்கும் 4 நிறுவனங்கள் உள்ளன. ஆதரவற்றவர்களை பராமரிக்கும் பணி, குழந்தைகளுக்கான பாதுகாப்பு என ரோபாட்டுகள் விரைவில் பல்வேறு கெட்டப்புகளில் அதிரடி காட்டும். 

கலிஃபோர்னியாவின் ரியல்டால் நிறுவனம் 15 ஆயிரம் டாலர் செலவில் தயாரிக்கும் ஹார்மோனி எனும் ஹைப்பர் ரியல் செக்ஸ் பெண், உங்களோடு பேசுவாள், சிரிப்பாள், ஏன்- பாலுறவும் சாத்தியம்தான்.

விளையாட்டல்ல, 30 பில்லியன் டாலர் புழங்கும் சந்தை இது. “இப்போது மனிதர்கள் தங்களுக்குள் இடையறாது பாலுறவை வைத்திருப்பதால், ரோபாட்டுகள் பிற பணிகளைச் செய்துகொண்டிருக்கின்றன. விரைவில் செக்ஸிலும் நுழையும்.

25 ஆண்டுகளில் சாத்தியம்” என்று திடமாகப் பேசுகிறார் டாக்டர் ட்ரூடி பார்பர். சந்தையில் 7 ஆயிரம் யூரோக்களில் தற்போது  Rocky or Roxxxy ஆகிய செக்ஸ்பாட்கள் பாலுறவுக்கானவை. 

ஹாங்காங்கைச் சேர்ந்த  ரிக்கி மா என்பவர், ரோபாட்டுகளைப் பற்றிய அறிவுஜீவியெல்லாம் கிடையாது. 35 ஆயிரம் பவுண்டுகள் செலவில் ஸ்கார்லெட் ஜோகன்ஸன் போன்ற பெண் ரோபாட்டை உருவாக்கியிருக்கிறார். ஸ்கார்லெட் என்றதும் அவென்ஞ்சர் பட ஃபைட்டையெல்லாம் டூப்பில்லாமல் செய்யும் ஸண் என்ற ட்ரீம் வேண்டாம். 

நீ அழகாக இருக்கிறாய்  என்றால், படு சிம்பிளாக வெட்கப் புன்னகையோடு கண்சிமிட்டும். உடனே டென்ஷனாகி, பெண்கள் எப்போதும் செக்சுக்காகத்தானா? என ஃபெமிநாஸி மூர்க்க கருத்துக்களும் கிளம்பாமல் இல்லை.  “ரோபாட்டுகளை செக்சுக்காக ஆண்கள் பயன்படுத்துவது தவறு என்று ஊடகங்கள் தொடர்ந்து ஆண்கள் மீது உளவியல் தாக்குதல் நடத்துகின்றன.

ஆனால் போர்ன் வீடியோவில் உள்ள பெண்ணைப் போலத்தான் ஆண்களிடம் பெண்கள் நடந்துகொள்கிறார்களா என்ன? பெண்களுக்கு தனி விருப்பங்கள், ஆசைகள் அனைத்தும் உண்டு. ஆனால் ஆண் இயல்பான பெண்ணிடம் உணராத பெண்மையை ரோபாட்டிடம் உணர்கிறான் என்றால் பிரச்னையின் ஆதாரம் எது?” என அழுத்தமாகப் பேசுகிறார் ரோபாட்டிக்ஸ் எதிக்ஸ் சென்டரைச் சேர்ந்த டாக்டர்  கேத்லின் ரிச்சர்ட்சன்.

ஆண் ரோபாட் தொழிற்சாலை பணிகளுக்கும் பெண் ரோபாட் குடும்பப் பணிகளுக்கும் சிறந்தவை என்று 2014 ஆம் ஆண்டு வெளியான நெஸ்டா ஆய்வு கூறுகிறது. பெண் செக்ஸ் ரோபாட்டுகளைப் போலவே ஆண்களிலும் செக்ஸ் ரோபாட் உண்டா என்ற கேள்வியும் உண்டு. 

‘‘இந்த விவாதம் இன்று மிக அவசியம். இதை கண்டுகொள்ளாவிட்டால் நாளை நீங்கள் தூங்கி எழும்போது உங்கள் அருகில் இருப்பது ரோபாட் துணையாகவே இருக்கும். அப்போது இது சரியா, தவறா என்று சிந்திக்க நமக்கு ஆப்ஷன்களே இருக்காது” என தீர்க்கதரிசனமாகப் பேசுகிறார் டாக்டர் வொயிட்பை.

“தொழில்நுட்பம் என்பது நல்ல வேலைக்காரனாக இருக்கும்வரை நல்லதுதான். பூதமாக மாறாதபடி விழிப்புணர்வோடு பார்த்துக்கொள்வது நம் கடமை” என்று கடந்தாண்டு அட்வான்ஸ்மென்ட் சயின்ஸ் விழாவில் பேசிய யேல் விஞ்ஞானி வெண்டெல் வாலச்சின் வார்த்தைகளில் உள்ளது எதிர்கால நிஜம்.

விக்டர் காமெஸி