அரிய சுறா!சுறா மற்றும் மண்டாரே ஆகிய இரு மீன்களும் சீன மருத்துவத்தில் பயன்படுவதால், அவை உலகெங்கும் வெகுவேகமாக வேட்டையாடப்பட்டு வருகின்றன. இந்த வேகம் அந்த இனத்தையே விரைவில் காலி செய்து விடும் என வார்னிங் செய்துள்ளது கனடாவைச்  சேர்ந்த  குலெப் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கை. 

“சுறாவின் துடுப்பு சூப், மண்டாரே உணவுக்கு உலகளவில் பெரும் கிராக்கி. இவை கடலில் பிடிக்கப்பட்டு நன்கு உலர்த்தப்பட்டு சந்தைக்கு வருவதால் இவற்றை சரியானபடி அடையாளம் காண்பதே சிரமம்” என தகவல் தருகிறார் ஜெனோமிக்ஸ் பன்மைத்துவ மையத்தின் உயிரியல் பேராசிரியரான டிர்க் ஸ்டெய்ன்கே. கனடாவில் உயிர்வாழும் மீன்களின் துடுப்பு  பகுதிகளை வெட்டுவதும் விற் பதும் தண்டனைக்குரிய குற்றம் என்றாலும் வியாபாரம் குறையவில்லை. 

ஃப்ளோரிடாவின் நோவா சவுத்ஈஸ்டர்ன் பல்கலைக்கழகம் இவை குறித்த  டிஎன்ஏ சோதனை முடிவுகளை வெளியிட்ட பின்பே இந்த விஷயம் உலகிற்கு தெரிய வந்துள்ளது. 1200 சுறாவகைகளில் 20 அரிய வகைகள்  உலகளவிலான வணிகத்தில் விற்கப்பட தடை உள்ளது.