குரங்குகளை அழிக்கும் பாமாயில்!உராங்  உட்டான்  குரங்குகளின் முக்கிய வாழிடங்களில்  இந்தோனேஷியாவும் ஒன்று. சுமத்ரா தீவுகளிலுள்ள ட்ரைபாபீட் காடுகள் பலவும் பாமாயில் பெறுவதற்காக தொடர்ந்து அழிக்கப் பட்டுவருவதால், உராங் உட்டான் குரங்குகளின் வாழ்க்கை உறைந்துபோய் நிற்கிறது. சுமத்ரா மற்றும் போர்னியோ ஆகிய இரு தீவுகளில் மட்டுமே தற்போது உராங் உட்டான் குரங்குகள்  பெருமளவு வாழ்கின்றன.

பிஸ்கட்டுகள், லிப்ஸ்டிக், பெயிண்ட், ஷாம்பூ, நூடுல்ஸ் என அனைத்திலும் இடம் பெறும் பாமாயில் தயாரிப்பில் இந்தோனேஷியா நாடு முன்னிலை வகிக்கிறது. வணிகத்திற்காக சட்டவிரோதமாக காடுகள் அழிக்கப்பட்டு பாமாயில் பெறுவதற்காக பனைமரங்கள் விதைக்கப்படுவது அங்கு  வாழும் பன்மைத்தன்மையை சிதைத்து உயிரிகளை அழித்துவருகிறது.

 உணவுதேடிவரும் குரங்குகளைக் கொன்று, அதன்குட்டிகளை வளர்ப்புப் பிராணி களாக விற்கும்  பிஸினஸும் இந்தோனேஷியாவில்  ஃபேமஸ். இயற்கை பாதுகாப்பு அமைப்பு, சுமத்ரா காடுகளிலுள்ள உராங் உட்டான் குரங்குகளை பாதுகாப்பபான இடத்திற்கு மாற்றும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளது.