நியூக்ளியர் போரில் தப்பிப்பது எப்படி?



அணுஆயுதப்போரில் தப்பிப்பதற்காக  லண்டன்  நகரில் அமைக்கப்பட்டுள்ள பதுங்கு குழியின் பெயர் பிண்டர். நாளிதழ்களிலும்  மிகச்சில  படங்களே வெளியிடப்பட்டுள்ள   இடம் இது. அரசு அதிகாரிகள், ராணுவ இயக்குநர், பிரதமர் என  அனைவரும் ஈஸியாக  பதுங்கு குழியில்  தப்பித்து விடுவார்கள். ஆனால் மக்கள் என்ன செய்வது?

நியூஜெர்ஸியின் ஸ்டீவன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியைச் சேர்ந்த வெலர்ஸ்டெய்ன், அணுகுண்டு வெடித்தால் ஏற்படும் பாதிப்புகள், தப்பிப்பது குறித்து Nukemap என்பதை உருவாக்கியுள்ளார். கூகுள்மேப்பை ரீமேக் செய்து உருவாக்கிய மேப் இது. ரஷ்யா மற்றும் அமெரிக்காவிடம் 15 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட  அணுகுண்டுகள்  இருக்கும். 

தற்போது வடகொரியா தொடந்து ஏவுகணைகளை டெஸ்ட் செய்வதால்,  அமெரிக்காவுக்கு  மூக்கு  விடைக்கும்  கோபம்.  ஜப்பான்  முன்னெச்சரிக்கையாக தன் நாட்டு மக்களுக்கு அணுகுண்டு  பாதிப்பிலிருந்து  எப்படி தப்பிப்பது என இப்போதே  டிரில் வகுப்புகளை தொடங்கி விட்டது.

குவாம் தீவிலுள்ள அரசும் பாதுகாப்பு விதி முறைகளை வெளியிட்டுவிட, அமெரிக்க அரசு அணு ஆயுத பாதுகாப்புக்காக ready,gov என தனி இணையதளமே தொடங்கிவிட்டது. “பிற எமர்ஜென்சி பிரச்னைகளை விட அணுஆயுதம்  என்பது  முற்றிலும்  வேறுவிதமானது” என்கிறார் தேசிய பாதுகாப்பு கொள்கை இயக்குநர் பேட்ரிசியா லூயிஸ்.

தப்பிப்பது எப்படி?

குண்டுவெடிக்கும் நிகழ்வை பார்ப்பது பார்வையிழப்பை ஏற்படுத்தும்.

பாதுகாப்பான இடத்தில் தங்கி யிருக்கவேண்டும். தூரம், நேரம், பாதுகாப்பு ஆகியவை இதில் முக்கியம்.

கதிர்வீச்சு பொருட்களை அகற்றுவதோடு,அதிலிருந்து விலகியிருப்பது உயிரைக் காக்கும்.

கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட உடைகளை  பாலிதீனால்  இறுகக் கட்டி மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு பாதிப்பற்ற இடத்தில் வைக்கலாம்.

சோப்பு கலந்த நீரை உடல் மீது ஊற்றிக்கொள்ளலாம். 

ஆனால்  உடலை  தேய்த்து  கழுவக்கூடாது.  அதேபோல  கெமிக்கல் பொருட்களை தலைமுடிக்கு பயன்படுத்தக் கூடாது. எ.கா. ஷாம்பூ, கண்டிஷனர்.