பிட்ஸ் எக்ஸ்பிரஸ்!



ரொம்ப யோசிப்பவர்களுக்கு பெரிய மூளை இருக்கவேண்டுமா? நீரில் ராஜாங்கம்  நடத்தும்  முதலை களின் மூளை எடை 8.4 கி.கி. இதனோடு ஒப்பிட்டால் மனிதர்களுடைய  மூளை  எடை சராசரியாக 1.3 கி.கி.ஜெல்லி மீன்களின்  உடலில் இதயம்,  எலும்புகளை  தேடினாலும்  கிடைக்காது. 95%  நீராலானது இம்மீன்.

சுறாக்கள் வாரத்திற்கு ஒரு பல்லை இழக்கின்றன!  ஏன்  தெரியுமா? பல்லை இறுக்கமாகப்  பிடிக்க அவற்றுக்கு  ஈறுகள் கிடையாது. விழுந்தாலும்  நோ பிராப்ளம், அடுத்தநாளே பல் முளைக்கத்தொடங்கிவிடும்.

விண்வெளிக்கு பறவைகளைக்  கொண்டுசெல்லும்  சிம்பிள்  பிளானை நாசா  முயற்சித்து தோற்றுப்போனது.  என்னாச்சு? பறவைகள் உணவை விழுங்க பூமியில்  ஈர்ப்புவிசை   இருக்கும். விண்வெளியில்  என்ன செய்வது? நரி, தன் சகோதரர்களான நாய், ஓநாய்கள் போல ஏராளமான  சொந்தங்களைக்  கொண்டதல்ல. முடிந்தவரை தனியாகவே வாழ விரும்பும் பிரைவசி விலங்கு.