எக்ஸ்பிரஸ் பிட்ஸ்!




1959 ஆம் ஆண்டு இந்திய  தொலைக்காட்சியில் முதன் முதலில் செய்தி வாசித்தவர், சிம்லாவில் பிறந்த வித்யா ராவத் (பிரதிமா பூரி) ஆவார்.
 
மிக அதிக வயதில் இரட்டை சதம் அடித்த கிரிக்கெட் வீரர் எரிக் ரோவன் ஆவார். 1951 ஆம் ஆண்டில் 42 வயதில் தென் ஆப்பிரிக்க அணிக்காக களமிறங்கி, இங்கிலாந்தை எதிர்த்து ஆடிய போட்டியில் 236 ரன்களை அடித்தார்.
 
1948 ஆம் ஆண்டு இங்கிலாந்து மன்னர் இரண்டாம் ஜார்ஜ் நவம்பர் மாதத்தில் பிறந்தவர் என்பதால், குளிர் காரணமாக தனது பிறந்தநாளை ஜூன் மாதம் கொண்டாடினார். பின்னாட்களில் அரச குடும்பத்தினர் இரண்டு பிறந்தநாள் விழாக்களை கொண்டாடவும் இப்பழக்கமே காரணமானது.
 
1958 -1962  ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மேற்கிந்திய தீவுகள் என்ற பெயரில் நாடு ஒன்று செயல்பட்டு வந்தது. இதன் தலைநகர் போர்ட் ஆஃப் ஸ்பெயின்.

க.ரவீந்திரன்