யானையின் புற்றுநோய் சீக்ரெட்ஸ்!



மனிதர்களின் உடலில் கேன்சர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். செல் பிரியும் வேகம் சிறிது அதிகரித்தால் போதும். கேன்சர் வந்தேவிட்டது என ஹாஸ்பிடல்  செல்லலாம். மனிதர்களுக்கே இந்த சிக்கல் உள்ளதென்றால், யானை போன்ற பேருயிர்களுக்கு எப்படி? 

1970ம் ஆண்டு மைக்கேல் பெட்டோ செய்த ஆராய்ச்சியில், கேன்சர் வருவதற்கான வாய்ப்பு, மனிதர்களுக்கும் எலிகளுக்கும் சமமாக இருந்தன. ஆனால் ஆயுளில் ஏறத்தாழ ஒன்று போலவே  இருந்த  யானைகளுக்கு இது ஒப்பீட்டளவில் குறைவு என்பது தெரிய வந்தது. பெடோ பாரடாக்ஸ் என்றழைக்கப்படும் ஆராய்ச்சியில் மனிதர்களுக்கு ஏற்படும் புற்றுநோய் வாய்ப்பு 25% என்றால், யானைகளுக்கு 5% என்பது பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. இம்மாற்றங்கள் நிகழ யானைகளுக்கு 55 மில்லியன் ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளன.   

ஆசிய யானைகளிலுள்ள ஆன்கோஜன் மற்றும் கட்டிகளை அழிக்கும் ஜீன்கள் இரண்டும் புற்றுநோயைக் கட்டுப்படுத்துகின்றன. புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் ஜீன்களை TP53 என்று அழைக்கின்றனர். மரபணுக்களின் காவலனான இதன் காரணமாகவே. புற்றுநோயை தடுக்க உடல்செல்கள் குறிப்பிட்ட நாளில் தானாகவே அழிவது அபோப்டாசிஸ் செயல்முறை நடைபெறுகிறது.

என்று  குறிப்பிட்ட நோய்களால் சிதைந்துபோன செல்கள் தானாக அழியும் இச்செயல்முறையில் புற்றுநோய் பிரச்னை தீர்க்கப்படுகிறது. TP53 யானைகளுக்கு 40 என்றால் மனிதர்களுக்கு இரண்டுதான் உள்ளது. இதுவே யானைகளுக்கு புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு தருகிறது. TP53 என்ற ஜீன்கள் எப்படி செயல்படுகிறது என்பதை ஆய்வுகளிலிருந்து அறிந்து, அதனை மனிதர்களுக்கும் முயற்சித்தால் புற்றுநோயை எளிதில் சமாளிக்க முடியும்.

கதிரியக்கம் மூலம் லிம்போசைட்ஸ் எனும் வெள்ளையணுக்களிலுள்ள டிஎன்ஏவை சிதைத்து அது குணமாகும் வேகத்தை பார்த்தபோது, மனிதர்களை விட யானையின் உடலிலுள்ள செல்கள் இதில் வேகமாக பாதிப்பை சரி செய்தன என்பது தெரிய வந்தது.

விக்டர் காமெஸி