பிட்ஸ் ஸ்பாட்!




*வால்நட்டின் தாயகம் இமயமலை. பின் ரோமானியர்களால் பரவலாக்கப்பட்ட வால்நட் இன்று உலகமெங்கும் விளைவிக்கப்படுகிறது.
  
*அமெரிக்காவின் முதல் பாஸ்தா கடை உருவானபோது, பாஸ்தா சூரிய ஒளியில் காய வைக்கப்பட்டதாம்.
  
*1910 ஆம் ஆண்டு வரை உலகெங்கும் 5-6 வயதுள்ள சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் ஒன்றுபோலவே டிரெஸ் அணிவிக்கும் பழக்கம் இருந்தது.
  
*ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தன் வாழ்நாள் முழுவதும் கார் ஓட்ட கற்கவில்லை.
  
*உலகெங்கும் சக்கைபோடு போடும் ஐஸ்க்ரீம் ப்ளேவர், வெனிலா.