அமில மழையைப் போல பனி என்பது சாத்தியமா?



ஏன்? எதற்கு? எப்படி?

அமில மழையைப் போலவேதான் அச்சு அசலாக அமில பனியும் உருவாகிறது. சல்பர் டயாக்ஸைடும், நைட்ரஜன் ஆக்ஸைடும் கரிம எரிபொருட்களிலிருந்து உருவாகி மேகங்களில் படிகின்றன.

நீரோடு வினைபுரிந்து, சல்ப்யூரிக் மற்றும் நைட்ரிக் அமிலமாக மாறி நிலம் நோக்கி பாய்ந்தால் அமிலமழை. அதுவே கிறிஸ்டல்களாக மாறி விழுந்தால் அமில பனி. பாதிப்பில் அமில பனியே முன்னிலை வகிக்கிறது. உறைந்த நிலையிலிருந்து உருகும்போது உண்டாகும் நீரிலுள்ள பேரளவிலான அமிலம் நிலத்தினை கடுமையாக மாசுபடுத்துகிறது.