‘‘ஆய்வுகளுக்கு நிதிவசதி இல்லை!’’



நேர்காணல்

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகத்தின் (ICMR) இயக்குநரும், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் தலைவருமான மரு. சௌமியா சுவாமிநாதன் அரசின் முன்நிற்கும்  சவால்களையும் செயல்படுத்தவேண்டிய சட்டங்களைப் பற்றியும் நம்மோடு உரையாடுகிறார்.

சுகாதாரத்துறை மற்றும் பொதுமக்களின் நலன் என இரண்டும் ஒன்றிணைந்தவை. இந்தியாவில் தொற்றுநோய்கள், தொற்றாநோய்கள் அளவு தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. சுகாதாரத்திற்கான அரசின் செலவு கூடுகிறது எனினும் மக்கள் தனியார் மருத்து வமனைகளை நோக்கிச்செல்வதும் குறையவில்லை. சுகாதாரத்தில் நமது இடமென்ன? தனியார்-அரசு என்ற கூட்டுறவை எப்படி பார்க்கிறீர்கள்?

முக்கியமான கேள்வி இது. சுகாதாரத்துறையில் அரசு தொடக்கநிலை சுகாதாரத்திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கிறது. இதில் தனியாரின் பங்குமுள்ளது. அரசு-தனியார் பங்களிப்பு என்றாலும் அரசுக்கு இதனை சரிபார்க்கும் பணியும் உள்ளது. அரசின் நோயெதிர்ப்பு  திட்டத்தில் 10 தடுப்பூசிகள் உள்ளன. எதிர்காலத்தில் இவை அதிகரிக்கப்பட வேண்டும் என்பதோடு, பயன்களை அதிகரித்து  இதற்கான அறிக்கைகளை தயாரிக்கும் தேவையுமுள்ளது. ஆல்கஹால், புகையிலை  குறித்த அரசின் திட்டவட்ட  விதி
முறைகள் பல்வேறு நோய்களுக்கு தீர்வாகலாம்.
 
தொற்றா நோய்கள் தொடர்ந்து வேகமாக பரவுகின்றன. மகாராஷ்டிராவின் கட்ச்ரோலி மாவட்டத்தில் மரு. அபய், ராணிபாங்  ஆகியோரின்  ஆய்வில் 14% இறப்புகளுக்கு காரணம் வாதநோய் என தெரியவந்துள்ளது. இதை தடுக்க அரசிடம் என்ன திட்டமிருக்கிறது?WHO வின் ஆய்வில் உயர் ரத்த   அழுத்தம்,  சர்க்கரை நோய், காற்று மாசுபாடு ஆகியவை பெருமளவு நோய்க்காரணிகளாக பட்டியலிடப்பட்டுள்ளன. ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் வாழ்க்கைமுறை சார்ந்தவை. இவை குறித்த  துல்லியமான ஆய்வுகள் மூலமே இதனை அறிய முடியும்.

எங்களுக்கு ஒதுக்கப்படும் ஆராய்ச்சித்தொகை மிக குறைவு என்பதால் இது குறித்த விரிவான ஆராய்ச்சி சாத்தியமில்லை. அறிவு மற்றும் செயல்பாடு இரண்டிற்குமான இடைவெளியைக் குறைப்பதே எங்களது முதன்மை லட்சியம்.
   
நீங்கள் கூறுவதை சற்று விளக்கிக் கூறமுடியுமா?

நோய்களைக் கண்டறியும் சோதனைகளைப் பற்றி கூறுகிறேன். WHO அங்கீகரிக்கும் தரத்திலான சிகிச்சை, சோதனைகளை இந்திய நிறுவனம் காசநோய் போன்றவற்றுக்கு செயல்படுத்தினால் ஐசிஎம்ஆர் அவர்களோடு இணைந்து அதனை மேம்படுத்தும். இறக்குமதி கருவிகளைவிட இந்தியாவில் தயாரிக்கப்படும் கருவிகளையே பயன்படுத்த விரும்புகிறோம்.

இக்கருவிகளை ஒருவர் வணிகரீதியில் தயாரித்தாலும் அறிவுசார்கூட்டாளியாக ஐசிஎம்ஆர் செயல்படும். தடுப்பூசிகள், மரணங்கள் குறித்த ஆய்வுத்தகவல்களை பெற்று வருகிறோம். எங்களிடம் பல்வேறு புதிய சிந்தனைகள் உருவானாலும் அதனை உடனடியாக செயல்படுத்த போதிய நிதிவசதி கிடையாது.
   
கடந்த 3 ஆண்டுகளாக மருந்து சோதனைகளைச்  செய்வதும், பதிவு செய்வதும் விதிமுறைகளால் தடுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான புகார்களை உள்ளூர் கமிட்டிகள்  மூலம்  தீர்க்கலாம்; மருந்து கண்காணிப்பு மையத்திடம் செல்லவேண்டியதில்லை என்கிறீர்கள். இம்முடிவு, ஆபத்தில்லையா?அனைத்து மருத்துவசோதனைகளும் சமமல்ல.

 மருத்துவ சோதனைகளை மக்களிடம்  செய்யும்  மருத்துவ கழகங்கள் சரியாக செயல்படுகின் றனவா  என  உள்ளூர்  கமிட்டிகளே சரிபார்க்கலாம். மருந்து கண்காணிப்பு கழகம், ஒழுங்குமுறை அமைப்பாக செயல்பட்டால் போதும். மருந்துகளுக்கு அனுமதி கிடைக்க தாமதமாவதால் சிரமப்படுவது நோயாளிகள்தான். ஆன்டிபயாடிக் போன்றவைகளுக்கு சோதனைகள் அவசியமில்லை.

தலைவலியான பழைய விதிகளை மாற்றியமைத்து, செயல்பாடு இன்னும் வேகம் பெறுவது அவசியம். காசநோய்க்கான Bedaquiline மருந்துக்கு அனுமதி கிடைக்கும்போது வெளிநாடுகளில் அதற்கான நோயாளிகளின் பதிவே முடிந்துவிட்டன.       
 
ஐசிஎம்ஆரின் 100 ஆண்டு வரலாற்றில் இரண்டாவது பெண் இயக்குநர் நீங்கள் தான். உங்களையடுத்து அறிவியல் துறையில் பெண்கள்  உருவாகி வருவதற்கான  வாய்ப்புகள் இருக்கிறதா?வருங்காலத்தில் அப்படி சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என  நம்புகிறேன். அடுத்த  ஐசிஎம்ஆர் இயக்குநராக பதவியேற்க ஒரு பெண் வருவதையே  நானும்  விரும்புகிறேன்.

தமிழில் - ச.அன்பரசு