ஒளிரும் கையுறை!



அண்மையில் மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நுண்ணுயிரியைப் பயன்படுத்தி ஒளிரும் கையுறை ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர்.குறிப்பிட்ட நுண்ணுயிரியோடு சில வேதியியல்  சேர்மங்களை சேர்க்கும்போது கையுறை ஒளிரத்தொடங்குகின்றது.

இதில் ஹைட்ரோஜெல் முறையில் இ கோலி பாக்டீரியா  நுண்ணுயிரியாக பயன்படுகிறது. நுண்ணுயிரிகளின் செல் அமைப்பில் மாறுதல்களைச் செய்து ஹைட்ரோஜெல் கையுறையில் பயன்படுத்துகின்றனர்.

தடய அறிவியல், மருத்துவ சோதனைகள், மாசுபாடு சோதனைகள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்த முடியும். “நுண்ணுயிரிகளை பொருட்களில் பயன்படுத்தி பல்வேறு சூழல் மாறுபாடுகளை கண்டறியலாம்” என தெம்பு தருகிறார்  எம்ஐடி ஆராய்ச்சியாளர் டிமோத்தி லூ. ஒளிரும் கையுறை குறித்த எதிர்கால புரிதலுக்கான தியரி வடிவிலான கொள்கைகளை ஆராய்ச்சிக்குழு தீவிரமாக உருவாக்கி வருகிறது.