அற்புத அறிமுகம்!




லேசர் ஒளி கீபோர்டாக பியானோ, கீபோர்டு அட்டகாச செய்தி. சயின்ஸ் நூல்களின் அறிமுகமும் அற்புதம்.
- பி.ஜெகத்ராம், திருத்தணி.
  
வரலாற்றை அர்ப்பணிப்பான உழைப்பால் மாற்றிய இங்கிலாந்து பெண்களின் செய்தி உற்சாக பூஸ்டர். விசா அவசியமில்லாத நாடுகள், காஸ்ட்லி பேனாக்கள் செய்தி என கதம்ப கலெக்‌ஷன் அமேஸிங் அழகு.
- எம்.சீனிவாசன், சென்னை-4.
  
கைரேகை குறித்த புதிய தகவல்களைத் தந்த மர்மங்களின் மறுபக்கம் தொடர் சுவாரசிய சுனாமி.
- ஆர்.பரிமளா ரமேஷ், கோவை.
  
சஹாரா அதிசயப்பனி தகவல், சூழல் பீதி. வானத்தில் விளம்பரம் செய்தி ரொம்பவே புது தினுசாக வசீகரம்.
- எஸ்.கனிமொழி, காரமடை.
  
நடுப்பக்கத்தில் உலகம் சுற்றிய வாலிபர் செய்தி பக்கா அழகு! பிலிப்பைன்ஸில் பிடிபட்ட போதைமருந்து அளவு மனதை பதற வைத்தது.
- குள. மூர்த்தி, திருப்பூர்.