டிஜிட்டல் கரன்சி பிட்காயின்!



டாலர், பவுண்டுகள் என அங்கீகரிக்கப்பட நாணயங்களுக்கு இணையாக கெத்து காட்டுகிறது டிஜிட்டல் கரன்சியான பிட்காயின். அண்மையில் 2016 ஆம் ஆண்டில் சிறந்த வளர்ச்சி யடைந்த கரன்சியாக பலரும் குறிப்பிட்டது பிட்காயினைத்தான். இவ்வாண்டில் மட்டும் இதன் மதிப்பு 1000 டாலர்கள்.

சில தள்ளாட்டங்கள் இருந்தாலும் சமநிலையாக பயணித்த பிட்காயின் இந்த சாதனையை நிகழ்ச்சி வணிகர்களின் வயிற்றில் பாயசத்தை வார்த்திருக்கிறது. பல்வேறு வணிகர்களிடையே கிரிப்டோ கரன்சியாக வணிகத்தில் பரிமாறிக்கொள்ளப்படும் கரன்சியே பிட்காயினாகும். ஒவ்வொரு நாட்டு கரன்சியையும் அந்நாட்டின் மத்திய வங்கி வெளியிடும். ஆனால் பிட்காயினை யார் வெளியிடுகிறார்கள் என்பதே மிஸ்ட்ரி. எனவே போதை பொருட்கள், ஆயுதங்கள் சட்டவிரோத கடத்தல்கள் உள்ளிட்டவைகளுக்கு அங்கீகாரம் பெற்ற நாடுகளின் கரன்சிகளுக்கு ஆல்டர்நேட்டிவாக பிட்காயின் சூப்பர் சப்போர்ட்.

மைனஸ்கள் இப்படி சர்ஃபிலும் போகாத கறைகளாக இருந்தாலும், அரசுகளின் கட்டுப்பாடு, கழுத்து நெருக்குதல் இல்லாத சுதந்திரம் பிட்காயினுக்கும் கூடுதல் எனர்ஜி. சூப்பர் மார்கெட்டில் பிட்காயினை வைத்து வெண்டைக்காய், முட்டைக்கோஸ் வாங்க முடியாதுதான். ஆனால் இணையத்தில் கேம்ஸ், விமான டிக்கெட்டுகள், ஏன் ஸ்டார்பக்ஸ் கடையில் காபி வாங்கி கூட சூடுபறக்க குடித்து ஜமாய்க்கலாம்.

தொடர்ந்து மேடைக்கு மேடை ஆப் பெயர் சொல்லி அலைகழிக்கும் அரசியல்வாதிகள் குறித்து கவலையே தேவையில்லை. மேலும் பல்வேறு நாடுகள் பிரிவது சேர்வதால் கரன்சியில் ஏற்படும் பரமபத சறுக்கல்கள் பிட்காயினுக்கு கிடையாது என்பதால் நோ டென்ஷன்!

‘‘கரன்சியைத் தொடர்ந்து அரசுகள் கட்டுப்படுத்துவதால் ஏற்படும் சிக்கல்கள் பிட்காயினுக்கு கிடையாது. இனி இதுதான் உலகளாவிய மாற்று கரன்சி!”  என நம்பிக்கை பொங்கியெழ பேசுகிறார் இங்கிலாந்தின் டிஜிட்டல் கரன்சி அமைப்பின் உறுப்பினரான ஜெமினா கெல்லி.    “பிட்காயின் குறித்து இன்னும் பலர் முழுமையாக அறியாதது அதில் புழங்குவது குறித்த சிக்கலைத் தருகிறது என்பது உண்மை.

டாலர்களையோ, பவுண்டுகளையோ பல்வேறு அரசுகள் தம் கைப்பிடிக்குள் வைத்திருப்பதால் பணவீக்கம் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படுகின்றன. ஆனால் பிட்காயின் என்பது புதிய சொத்துபோல” என குளுக்கோஸை கரைத்து நெஞ்சில் ஊற்றியதுபோல ஜில் குளிர்ச்சியோடு பேசுகிறார் சீனாவின் பிட்காயின் எக்ஸ்சேஞ்ச் பிடிசி இயக்குநரான பாபி லீ. பிட்காயின் பூமி!

- கே.கபிலன்குமார்