ஸ்டிக்கரே இனி சார்ஜர்!



பிரெஞ்சு நிறுவனமான எனர்ஜி ஸ்கொயர், வயர்லெஸ் சார்ஜ் செய்ய இதுவரையிலும் யாரும் யோசிக்கவே முடியாத ஒன்றை கண்டுபிடித்துள்ளது. ஸ்டிக்கர்தான் இனி சார்ஜரே! இந்நிறுவனத்தின் சார்ஜிங் பேட் மற்றும் ஸ்டிக்கர்களை போனில் இணைக்கவேண்டும்.

ஸ்டிக்கரில் உள்ள இரு மெட்டல் எலக்ரோட்ஸ் பட்டன்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதனை யுஎஸ்பி போர்டுகளில் பொருத்தவேண்டும். அவ்வளவுதான் பிறகு உங்கள் போனில் எவ்வளவு சார்ஜ் ஏறியுள்ளது என கால்குலேட்டர் தட்டி கணக்கிட்டால் போதும்.

பல்வேறு கருவிகளை இந்த ஸ்டிக்கர் மூலம் ஒரே நேரத்தில் சார்ஜ் செய்ய முடியும். பல்வேறு வயர்லெஸ் சார்ஜர் கருவிகள், மின்காந்த தூண்டலின் மூலம் செயல்படுகிறது என்றால் இந்த ஸ்டிக்கர் மின்கடத்தல் முறையில் செயல்படுகிறது. இதிலுள்ள பிரச்னை ஸ்டிக்கர் முழுமையாக சார்ஜ் போர்ட்டை ஆக்கிரமித்துவிடுவதுதான். எனர்ஜி ஸ்கொயர் ஸ்டிக்கரின் விலை 6044 ரூபாய்தான்.

- ச.திருநாவுக்கரசு