ஆயுள் சொல்லும் ரத்த சோதனை!



பாஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்தான் ரத்தசோதனையின் மூலம் மனிதர்களின் ஆயுளை அறியமுடியும் என நம்பிக்கை தந்துள்ளனர். இந்த ஆராய்ச்சியில் ரத்த சோதனையின் மூலம், நாம் எவ்வளவு நாட்கள் வாழ முடியும் என கண்டறியலாம் என்று கூறியது ரொம்பவே புதுசு.
 
மக்களிடமிருந்து பெறப்பட்ட 5000 ரத்த மாதிரிகளை வைத்து செய்யப்பட்ட ஆராய்ச்சியில் கிடைத்த முடிவுகளை வைத்து அடுத்த 8 ஆண்டுகளுக்கு அவருக்கு வரும் உடல் நல பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்று கூறியிருப்பது சூப்பர்தானே!
 
“மனிதர்களின் வயது, உடல்ரீதியான செயல்பாடுகள், இதயநோய், வாதம், நீரிழிவு உள்ளிட்ட நோய்களை இந்த ரத்த சோதனையின் மூலம் கண்டறிவது சிறப்பு” என விரிவாக பேசுகிறார் டாக்டர் பாவ்லோ செபாஸ்டியானி.
 
ஒருவரின் ரத்த சோதனைகள் மூலம்  வயதாகும்போது ஏற்படும் நோய் தொடர்பான விஷயங்களை முன்னரே கணிக்க முடியும் என்றாலும் இது தொடர்பான மேற்கொண்டு செய்யப்படும் ஆராய்ச்சிகளே இதனை அதிக துல்லியமாக்கும்.

- ப.சி.அருண்பழனி