சின்ன சர்வாதிகாரிகள்!



டிக்டேட்டர்கள் என்றாலே ஸ்டாலின், ஹிட்லர் என தொண்டையைச் செருமி அவர்களின் கொடூரங்களை சொல்ல வார்ம் அப் செய்பவர்கள்தான் நம்மில் அதிகம். சிம்பிள் ஷார்ப் டிக்டேட்டர்களாக சைலண்டாக கோலோச்சிய நபர்களின் பகீர் லிஸ்ட் இது.

கார்லோஸ் மானுவல் அரானா ஓசோரியோ (1970-1974)

1945 ஆம் ஆண்டில் குவாத்திமாலாவில் பல்வேறு ராணுவ கலகங்களால்
அரியணை ஏறிய 7 அதிபர்களின் வரிசையில் கார்லோஸ் அரானாவும் ஒருவர். இவரின் பெயரைப்போலவே அட்டூழியங்களும் நீண்டவை. புரட்சியாளர்கள், மாணவர்களின் போராட்டம், தொழிலாளர் சங்கங்கள் என 20 ஆயிரம் நபர்களை முற்றாக அழித்தொழித்தார், இதற்கும் தப்பியவர்களை காணவில்லை என டி.வி அறிவிப்பில் வலம் வரச்செய்த உத்தம வில்லன் கார்லோஸ்.

ஃபிரான்சிஸ்கோ மாசியாஸ் என்குமா (1968-1979)

மேற்கு ஆப்பிரிக்க நாடான எக்வடோரியல் கினியில் முதல் அதிபர் உடல்நலமின்றி முடங்க, தன்னைத்தானே அதிபராக அறிவித்து தேசத்தின் கருவூலத்தை சூட்கேஸ்களில் அடைத்து தன் படுக்கையின் கீழே பாதுகாத்த தேசபக்தர்தான் பிரான்சிஸ்கோ(1924-1979). இவர் தனது ஆட்சிக்காலத்தில் கொன்று குவித்த மக்களின் எண்ணிக்கை 80000க்கும் மேல். 1979 ஆம் ஆண்டு ஏற்பட்ட ராணுவ கலகத்தில் தியோடரோ ஒபியாங் என்ற ராணுவ தளபதியால் தூக்கிலிடப்பட்டவரின் ஆட்சிகாலத்தை ஆப்பிரிக்காவின் வதை முகாம் காலகட்டம் என்று திகிலோடு வர்ணிக்கிறார்கள்.
  
என்வர் ஹோக்ஸா (1944-1885)

அல்பேனியா நாட்டின் சிவப்பு சிந்தனை சர்வாதிகாரிதான் ஹோக்ஸா(1908-1985). நாடு முழுவதும் பல்வேறு கட்டுமானங்களை கட்டித்தள்ளிய ஹோக்ஸா, எல்லாமே அல்பேனியாவின் நலனுக்காகத்தான் என்று அசராமல் விளம்பரப்படுத்திய கட்டுமான கிங். அரசியல்ரீதியான குற்றங்களுக்காக மட்டுமே 2 லட்சம் நபர்களை கண்ணியமாக சிறையி
லடைத்த ஒன்வே பேச்சு புரட்சிக்காரர் இவர்.
  
இசையாஸ் அஃப்வெர்கி

எத்தியோப்பியாவிடமிருந்து எரிட்ரியா 1991 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. இன்றுவரையும் அங்கு அஃவெர்கியின் ராஜாங்கம்தான். சுதந்திரம் பெற போராடிய காலம் தொடங்கி நாடு முழுவதும் அஃப்வெர்கி தொடங்கிய ரகசிய சிறைகளின் எண்ணிக்கை அவருக்கே குழப்பம் தரும். வாலன்டியர் ராணுவச்சேவைக்கு வம்படியாய் இழுத்துபோவது என மக்களை 24X 7 கதறவிடுவதில் சளைத்தவரில்லை அஃப்வெர்கி. இவரின் அட்டகாசத்தினால் நாட்டை விட்டு ஓடிப்போனவர்களின் எண்ணிக்கை  மட்டும் 3,80,000

- ராஜிராதா, பெங்களூரு.