அழியாத காட்சி!



ஒலிம்பிக் போட்டிகளைவிட மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா அதிக பதக்கங்கள் குவிப்பது சந்தோஷம். இந்த ஆண்டு பாரா ஒலிம்பிக் போட்டிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் முக்கியமானது இது.

ஒரு விபத்தில் ஒரு பக்க கை மற்றும் ஒரு காலை இழந்த பிரேசில் நீச்சல் வீரர் டாலிஸன் க்ளோக், 200 மீட்டர் போட்டியில் நீந்தும் காட்சியை தண்ணீருக்கு அடியிலிருந்து புகைப்படமாக எடுத்தனர். போட்டியில் வெண்கலப் பதக்கம் வாங்கினாலும், அவரது முயற்சி அழியாத காட்சியாகிவிட்டது.