சாதனை சிற்பம்!






நம்புங்கள்... பாலாடைக்கட்டியில் சிற்பம் செய்வதும் ஒரு கலை. ட்ராய் லாண்ட்வெர் என்பவர் இதில் புகழ்பெற்றவர். உலகின் மிகப்பெரிய பாலாடைக்கட்டி சிற்பத்தை இவர் கடந்த வாரம் செதுக்கினார். செப்டம்பர் 18ம் தேதி உலக சீஸ்பர்கர் தினம். இதற்காக அமெரிக்காவின் ‘தி மெல்ட்’ நிறுவனம் 691 கிலோ எடையுள்ள இந்த சிலையை உருவாக்கி, கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறது. இந்த சிலையே ஒரு சீஸ்பர்கர் போல இருப்பது கூடுதல் சிறப்பு.