நம்பினால் நம்புங்கள்!



* 8 சதவீத அமெரிக்கர்கள் உடை ஏதும் அணியாமலே உறங்குகின்றனர்.

* உலகில் Enigmatology என்ற படிப்பில் பட்டம் பெற்றவர் வில் ஷார்ட்ஸ் மட்டுமே. இவர் ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையின் க்ராஸ்வேர்ட் புதிர் பகுதியின் ஆசிரியர். அவர் படித்த Enigmatology என்பது புதிர்களைப் பற்றி படித்தல்தான்!

* ஒரே நிமிடத்தில் அதிக கைதட்டல்களுக்கான உலக சாதனை: 1020 க்ளாப்ஸ்!

* பிரேசிலில் உள்ள ஒரு சிறைச்சாலையில் சைக்கிள் பெடலிங் மூலம் மின்சாரம் தயாரிக்கும் வசதி உள்ளது. கைதிகள் பெடல் செய்வதன் மூலம் உருவாகும் இந்த மின்சாரம், அருகிலுள்ள கிராமத்துக்கு வழங்கப்படுகிறது. அதற்கேற்ப கைதிகளின் தண்டனைக் காலமும் குறைக்கப்படுகிறது.

* திபெத்தியர் தங்கள் நாக்கை வெளித் தள்ளுவதன் மூலமாகவே ‘ஹலோ’ சொல்வார்கள்.



* 1919ம் ஆண்டு 40 டாலருக்கு வாங்கப்பட்ட கோககோலா பங்கு ஒன்றின் இன்றைய மதிப்பு 9.8 மில்லியன் டாலர்!

* 9/11 சம்பவத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவில் பறந்து கொண்டிருந்த அத்தனை விமானங்களையும் தரையிறங்கும்படி அறிவுறுத்திய நபர், அந்தப் பணியில் அன்றுதான் சேர்ந்திருந்தார்!

* அமெரிக்காவில் ஏகே-47 விற்பனை செய்வதை விட, வாழைப்பழங்கள் விற்பதற்கு அதிகக் கட்டுப்பாடுகள் உண்டு.

* அமெரிக்க விண்வெளி வீரர்கள், தேர்தலின்போது விண்வெளியில் இருந்தே ஓட்டளிக்கும் வசதி 1997 முதல் செய்யப்பட்டுள்ளது.

* வால்நட் அளவே மூளையைப் பெற்றிருந்தாலும் கூட, ஆக்டோபஸ்கள் மிகுந்த புத்திசாலித்தனம் கொண்டவை.