அசத்தல்... டிஜிட்டல்!



அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை குறித்த செய்தி, இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். பெர்னார்ட் ஷாவின் நேர்மையும் அம்பேத்கரின் சிந்தனையும் வியக்க வைத்தது. ‘முத்தான மூன்று விஷயம்’ சத்தாகவும் இருந்தது.
- மு.ரவிபாலாஜி, திருச்சி.

டிஜிட்டல் லாக்கரை எப்படிப் பயன்படுத்துவது? அதன் செயல்பாடுகள் என்ன என்பது குறித்து பல சந்தேகங்கள் எனக்கு இருந்தன. இந்த வார ‘முத்தாரம்’ அதை நீக்கியது. நன்றி!
- பா.தேவதர்ஷினி, வக்கம்பட்டி



‘தகவல் தெரியுமா?’ பகுதியில், சங்கில் வரும் அலையோசை பற்றிய அறிவியல் உண்மையை விளக்கியிருந்தது அற்புதம். அரிசியில் மட்டும் 60 ஆயிரம் வகை இருக்கிறது என்கிற செய்தி அடடே ரகம்!
- பிருந்தா, கடலூர்.

‘மருந்து மகத்துவம்’ தொடரில் தைராய்டு பிரச்னை குறித்து டாக்டர் கு.கணேசன் விளக்கிய விதம் நன்றாக இருந்தது. தைராய்டு பிரச்னை இருப்பவர்கள் அத்தனை பேருக்கும் வழிகாட்டும் கட்டுரை அது.
 - கவிதா சண்முகம், திருத்தணி.

நடுப்பக்க புகை நகரம் போட்டோ அசத்தல். பாரிஸ் மனித மியூசியமும் வியக்க வைத்தது. அட்டைப் படமும் அபாரம்.
- யாழினி, தஞ்சாவூர்.