நம்பினால் நம்புங்கள்




*கான்டாக்ட் லென்சுக்கான ஐடியாவை முதலில் கூறியவர் லியனார்டோ டாவின்சி... 1508ம் ஆண்டில்!

*உலகில் இதுவரை  மிக அதிக நபர்களால் நுழைவுக் கட்டணம் செலுத்தி காணப்பட்ட நினைவுச்சின்னம் ஈஃபிள் டவர். 2011ம் ஆண்டில் மட்டுமே 69.8 கோடிப் பேர் பார்வையிட்டுள்ளனர்.

*மவுரிடானியா நாட்டுப் பெண்கள் தங்கள் மகள்களுக்கு வலிந்து அதிக உணவு ஊட்டுவது வழக்கம். ‘குண்டாக இருப்பதே சிறப்பு’ என அங்கு நம்பப்படுவதே காரணம்.

*ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரத்துக்கும் அதிக கன்டெய்னர்கள் கடலில் தொலைகின்றன; அல்லது கைவிடப்படுகின்றன. இவற்றில் 10 சதவீத கன்டெய்னர்களில் விஷத்தன்மை மிக்க வேதிப்பொருட்கள் உள்ளன.

*அபார்ஷன் செய்துகொள்ளும் பெண்களில் 20 வயதுகளில் உள்ளோரே 58 சதவீதம். இவர்களில் 10ல் 6 பேருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது.

*லண்டனிலுள்ள பிக்பென் மணிக்கூண்டை இப்போது கட்டுவதாக இருந்தால், 15 கோடி ரூபாய் செலவாகும்.

*நியூயார்க்வாசிகள் 311 என்ற எண்ணுக்குத் தொடர்புகொண்டு இலவச கருத்தடை உறைகளைப் பெறலாம்.

*அமிர்தசரஸ் பொற்கோயிலில் தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு உணவு பரிமாறப்படுகிறது.

*பூனைகளுக்கு சாக்லெட் ஒவ்வாமை உண்டு. சில நேரங்களில் இதனால் நோயுறவோ, இறக்கவோ கூடும்.

*அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டபோது, 100 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஓவியங்களும் அழிந்தன. இவற்றில் அரிதான பிகாசோ ஓவியமும் அடங்கும்.