A to Z டேட்டா நெருப்புக்கோழி




*நெருப்புக்கோழிகளில் 3 இனம் உண்டு. அவை ஏழு அடி முதல் எட்டு அடி உயரம் வரை வளரும். சுமார் 130 கிலோ எடை இருக்கும். 

*120 மில்லியன் வருடங்களுக்கு முந்தைய நெருப்புக்கோழி எலும்புகளின் படிமங்கள் கிடைத்துள்ளன. நெருப்புக்கோழிகள் டைனோசர்களின் வழிவந்தவை.

*உலகமெங்கும் 2 மில்லியன் நெருப்புக்கோழிகள் உள்ளன.

*ஆண் நெருப்புக்கோழிகள் கருப்பு நிறத்திலும் பெண் நெருப்புக்கோழிகள் பழுப்பு நிறத்திலும் இருக்கும்.

*நெருப்புக்கோழிகளின் கால்களில் 2 விரல்கள் மட்டுமே உண்டு.

*நெருப்புக்கோழியால் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் தொடர்ந்து 45 நிமிடத்திற்கு ஓட முடியும். ஆனால் பறக்கத் தெரியாது.

*பழங்கள், கொட்டைகள், பூச்சிகள், குட்டி ஊர்வன இனங்கள் ஆகியவை நெருப்புக்கோழியின் உணவுகள்.

*வரிக்குதிரைகள், எறும்புத்தின்னி ஆகிய மேயும் விலங்குகளோடு நெருப்புக்கோழிகள் இணக்கமாக வாழும். இவை நெருப்புக்கோழிகளுக்கு பூச்சிகள், புழுக்கள் போன்றவற்றை உண்ணக் கொடுக்கும். பதிலுக்கு கொடிய விலங்குகளோ, மற்ற ஆபத்துகளோ நெருங்கினால் இவற்றை எச்சரிக்கை செய்வது நெருப்புக்கோழியின் வேலை.

*கும்பல் கும்பலாகச் சுற்றும் நெருப்புக்கோழிகளில் பெண் நெருப்புக்கோழிகள் தலைமை வகிக்கும்.

*நெருப்புக்கோழிகள் தங்களுக்குள் செய்திகளைப் பரிமாறிக்கொள்ள வால்பகுதியை ஆட்டும், தலையை அசைக்கும்.

*இவற்றின் வலிமையான கால்கள் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகும். ஒரே உதையில் சிங்கத்தைக் கூட கொல்லும் வலிமை உடையவை இவை.

*ஒரு கூட்டத்திலிருக்கும் கூடுகளில் மிகச் சிறந்ததைத் தேர்ந்தேடுத்து அதில் தாங்கள் முட்டைகளை இவை இட்டுப் பாதுகாக்கும். 3 மீட்டர் அகலமுள்ள கூட்டில் எத்தனையோ முட்டைகள் இருந்தாலும் அதில் தத்தமது முட்டைகளை ஒவ்வொன்றும் எளிதாக அடையாளம் கண்டுகொள்ளும்.

*உலகிலேயே மிகப்பெரிய முட்டை நெருப்புக்கோழியின் முட்டைதான். இந்த முட்டை 2 டஜன் கோழி முட்டைகளுக்கு சமமாகும்.

*முட்டைகளை கூட்டத்தின் தலைவி பகல் பொழுதில் அடை காக்கும். இரவுகளில் ஆண் பறவை அடை காக்கும்.

*முட்டையிலிருந்து 40-42 நாட்களில் குஞ்சுகள் வெளிவரும்.

*நெருப்புக்கோழிகள் இறகுகளுக்காகவும் மாமிசத்திற்காகவும் உலகமெங்கும்  வளர்க்கப்படுகின்றன.

*இதன்  சராசரி ஆயுட் காலம் சுமார் 45 வருடங்கள். 

- ஏ.ஹம்ஸத், கீழக்கரை.