எங்கும் காக்கும் கூண்டு!



செவ்வாய் கிரகத்தின் வெப்பம், ஆழ்கடலின் அழுத்தம், அணு உலை வெடித்த விபத்துப் பிரதேசம், பூகம்பத்தால் சீரழிந்த நகரம் என எங்கேயும் ஏதாவது மனிதப் பணிகளுக்கான தேவை இருக்கிறது.

அப்போது மனிதர்கள் அங்கு சென்று பாதுகாப்பாகப் பணிபுரிய ஒரு கவச வீடு தேவைப்படுகிறது. அதற்காக பிரான்ஸின் கோமெக்ஸ் நிறுவனம் உருவாக்கிய கூண்டு இது. ‘ஷீ’ எனப்  பெயரிடப்பட்டுள்ள இது, வெளிப்புறச் சூழலின் எந்த அபாயமும் உள்ளே இருப்பவர்களைத் தாக்காதபடி பாதுகாக்கிறது.