மனசு



ஃபேக்ட்

உடைமைகளுக்காகச் செலவழிப்பதை விட, அனுபவங்களுக்காகச் செலவழிப்பதே மகிழ்ச்சிக்கான சாவி என்கிறது மனவியல்.தனக்காகச் செலவழிப்பதைக் காட்டிலும் பிறருக்குச் செலவழிப்பதிலேயே மனம் அதிக மகிழ்ச்சி பெறுகிறது என்பது ஓர் ஆய்வு முடிவு!இணைய போதையை மனநலக் குறைபாடுகள் பட்டியலில் சேர்ப்பது பற்றி மனவியல் நிபுணர்கள் இப்போது விவாதித்து வருகிறார்கள்.

‘தான் இறந்துவிட்டோம்’, ‘தான் பிறக்கவே இல்லை’, ‘தான் மண்ணோடு மண்ணாக மக்கி விட்டோம்’ என கற்பனை செய்துகொள்கிற ஒரு வகை மனப்பிரச்னையும் சிலருக்கு உண்டு.

முற்றாக மாறுபட்டுள்ள 400 வகை போபியாக்கள் (அச்சக் கோளாறுகள்) மனவியலாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன.ஏதேனும் போபியா உள்ளதே என அச்சப்படுவதே ஒரு போபியாதான் (Phobophobia).பிரான்சில் 5ல் ஒருவர் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த தேசமே அதிக மனச்சோர்வாளர்களைக் கொண்ட நாடாக ஆகியிருக்கிறது.எப்போதும் எதிர் எண்ணங்களிலேயே இருப்பவர்களுக்கு ஜீன் ஒரு காரணம் என அறியப்பட்டுள்ளது.

பிரபலமானவர்கள் தன்னைக் காதலிப்பதாகவே எண்ணிக்கொள்ளும் பிரச்னைக்கு Erotomania என்று பெயர்.1950களில் மனநலப் பிரச்னைகளுக்காக சிகிச்சை பெற்று வந்த நபர்களுக்கு இருந்த அதே அளவு மனக்கலக்கம் (Anxiety), இன்றைய பள்ளி மாணவர்களுக்கும் உள்ளது.

தொகுப்பு: சூர்யா