டியர் டாக்டர்*ஆசிரியர் முதல் சீஃப் டிசைனர் வரை உள்ள பொறுப்பான அனைவருக்கும் குங்குமம் டாக்டரின் ஆறாம் ஆண்டின் நல்வாழ்த்துக்கள். கடந்த 5 ஆண்டுகளாக செய்து சாதித்த மருத்துவ ஆலோசனைகள் மகத்தானவை, மற(று)க்க முடியாதவை. அசல் மருதாணியின் பயன்கள் அழகும் ஆரோக்கியமும் மிக்க விஷயங்கள் என்பதனை வெளியிட்டது நன்று. ரவுண்ட்ஸ் ‘தஞ்சாவூர்’ - ஊர் கதம்பப்பூ மாதிரி மணம் வீசியது!
- சிம்மவாஹினி, வியாசர் காலனி.

*வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டிய மருத்துவ உபகரணங்கள் பற்றிய குறிப்புகள் பயனுள்ளவையாக இருக்கிறது. குழந்தைகள் நல பராமரிப்பு பற்றிய கவர் ஸ்டோரி இன்ப அதிர்ச்சி. குழந்தைகளைப் பெற்றிருக்கும் இன்றைய பெற்றோரும், நாளைய பெற்றோரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய கட்டுரை!
- எஸ்.சுப்ரமணியம், சேலம்.

*6-ம் ஆண்டில் வெற்றிகரமாக காலடி வைத்திருக்கும் குங்குமம் டாக்டருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அட்டையை அலங்கரித்த மழலையின் படம் கொள்ளை கொண்டது.
- கோபாலகிருஷ்ணன், தாம்பரம்.

*குழந்தையின்மை சிகிச்சை என்றாலே அலோபதிமுறைதான் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. ஆனால், சித்த மருத்துவத்திலும் சிறப்பான சிகிச்சைகள் உண்டு என்பது யோசிக்க வைத்தது. அசோகா மரப்பட்டைப் பொடி பெண்களின் PCOD பிரச்னையைத் தீர்க்கும் என்பது சித்த மருத்துவத்தின் சிறப்புக்கு ஓர் உதாரணம்.
- தமிழரசி, ஈரோடு.

*பேஜட்ஸ் நோயின் அறிகுறிகள், சிகிச்சைகள் என ஏ டு இஸட் தெளிவாக விளக்கி இருந்தது மிகவும் அருமை. மெடிக்கல் ஷாப்பிங் பகுதியில் இடம் பெற்றிருந்த மருத்துவ உபகரணங்கள் குறித்த தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.
- நாகராஜன், சித்தாலப்பாக்கம்.

*ஒருவர் மீது ஒருவர் புகார் கூறுவதை நிறுத்தினாலே, அது நல்ல உறவுக்கு வழி வகுக்கும் என்பதை உளவியல் பகுதியில் இடம் பெற்றிருந்த கட்டுரை தெளிவாகக் கூறியது. செல்லப் பிராணிகளுக்கும் உடற்பயிற்சி கட்டாயம் என்பது திகைப்பில் ஆழ்த்தியது.
- குமரேசன், மதுரை.

*‘கொளுத்தவனுக்கு கொள்ளு... இளைத்தவனுக்கு எள்ளு’ என்பது நீண்ட நாட்களாகவே சொல்லப்பட்டு வரும் ஒரு பழமொழி. ஆனால், அது வெறுமனே சொல்லப்பட்ட பழமொழி இல்லை. மருத்துவ முக்கியத்துவமும் உண்டு என்பதை தெளிவாக விளக்கிவிட்டீர்கள்.
- ரஞ்சித், சிவகாசி