மன அழுத்தத்தை இப்படியும் குறைக்கலாம்!



ஆராய்ச்சி

ஹைதராபாத்தைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் CSIR-Centre For Cellular and MB என்ற மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான சிகிச்சைக்கு உதவும் எண்டோசைடோசிஸ்(Endocytosis) என்ற புதிய வழிமுறையைக் கண்டுபிடித்துள்ளனர்.

மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளின் முடிவுகள் அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி வெளியிடும் ‘பயோகெமிஸ்ட்ரி’ என்ற இதழில் வெளியிடப்பட்டன. இவை குறித்து CSIR-CCMB மையத்தைச் சேர்ந்த அமித்தபா சத்தோபாத்தாயா குழு, ‘இந்த ஆய்வு முடிவுகளில் ஒரு சில நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கின்றன’ என்று குறிப்பிட்டிருக்கிறது.

நரம்பியல் தொடர்பான, மனநலம் சார்ந்த பிரச்னைகளான பதற்றம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றை குணப்படுத்துவதில், உணர்வினை ஏற்றுக்கொள்ளும் காரணிகளில் ஒன்றான செரோடோனின் என்ற மாத்திரை முக்கிய பங்காற்றுகிறது. உணர்வை ஏற்றுக்கொள்ளும் இந்த காரணி, செல் சவ்வுகளின் சிறப்புத்தன்மை வாய்ந்த பகுதிகளின் வழியாக செல்லுலரின் உட்புறத்தைச் சென்றடைகிறது. இந்த செயல்பாடு கேத்ரின் கோட்டட் பிட்ஸ்(Clathrin Coated Pits) என்று குறிப்பிடப்படுகிறது.

இதில் மன அழுத்தத்தைக் குறைக்க செய்கிற புதிய சிகிச்சை முறையாக எண்டோசைட்டோசிஸ்(Endocytosis) என்பதும் இன்றியமையாத ஒரு செயல் முறை. இந்த உயிருள்ள செல் மூலக்கூறு பிணைப்புகளை(Molecular Bound) தன்னுடைய மேற்பரப்பிற்கு எடுத்துச் செல்கிறது. மேலும், இந்த செயல்முறையில் ஏராளமான மாத்திரைகள் GPCRs(G Protein-Coupled receptors) வழியாக வினைபுரிகின்றன.

அளவில் மிகச் சிறிதான இந்த செல்லுலார் நானோ இயந்திரங்கள், செல் சவ்வு போன்ற திரவத்தில் வைக்கப்பட்டுள்ளன. அதாவது, செல்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இல்லாமல் தனித்தனியாகப் பிரிக்கப்படுகின்றன. இவ்வாறு பிரிக்கப்படும் உயிரணுக்கள், தத்தம்முடைய உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஒன்றுடனொன்று தொடர்பு கொள்ள உதவி செய்கிறது.

செல்லுலார் சமிக்ஞை முறையில், GPCRs தன் பெரும்பான்மையான பங்களிப்பால், முக்கிய மாத்திரையாகப் பிரதிபலிக்கிறது. எண்டோசைடோசிஸ் செயல்பாடு காரணமாக GPCRs செல்களின் உள்பகுதியில் நுழைவது தெரிய வருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். CCMB மையத்தின் இந்தப் புதிய கண்டுபிடிப்புகள் மாலிக்யூலர் தொடர்புடைய செயல்பாடுகளின் அடிப்படை புரிதல்களை அதிகரிக்க உதவுகிறது. அதன்மூலம், எண்டோசைடோசிஸ்ஸின் GPCR செல்களை முன்னிறுத்த முடியும்’ என தெரிவிக்கிறது.

இருப்பினும் எண்டோசைடோசிஸ் ரெகுலேஷன் பற்றிய விவரங்களும், உணர்வை ஏற்கும் ஒரு வகையான காரணி செல்லும் பாதையும் இன்னும் விளங்கிக் கொள்ள முடியாத புதிராகவே உள்ளதாகவும், அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- விஜயகுமார்