பிரபலமாகும் Cheese Tea...புதுமை

சில வருடங்களுக்கு முன்பு எப்படி ‘பட்டர் டீ’ பிரபலமானதோ, அதேபோல, இப்போது சீஸ் டீ(Cheese Tea) ஆசியாவில் தோன்றி, தற்போது உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது.அப்படி என்ன இருக்கிறது இந்த சீஸ் டீயில்...

சீஸ் டீ பல விதங்களில் தயாரிக்கப்படுகிறது. இனிப்பான பிளாக் டீ அல்லது க்ரீன் டீயோடு பால் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ சாப்பிடலாம். இதில் சூடாக அல்லது குளிர்ச்சியாக என்று இரண்டு வகையாக சாப்பிடுகிறார்கள். இந்த சீஸ் டீயை பலவிதமான நறுமணச்சுவைகளிலும் தயாரிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

அப்படி தயாரிக்கும் டீயில் கீழடுக்கில் க்ரீம் சீஸ், வைப்டு க்ரீம், கன்டன்ஸ்டு மில்க் என ஒவ்வொரு அடுக்காக சேர்த்து, சீஸின் நுரையை மேல் அடுக்கில் சேர்க்கிறார்கள். அதற்கு மேல் சிறிது உப்பும் தூவி கொடுக்கிறார்கள். ஒவ்வொரு துளி பருகும்போதும் இனிப்பு தேநீர், உப்பு மற்றும் இனிப்பு க்ரீம் சீஸ் என கலவையான சுவையை உணர முடியும். இதுவே சீஸ் டீயின் பிரபலத்திற்கு காரணம்.

பல தசாப்தங்களாக தேயிலையின் ஆரோக்கியத்தை ஆராய்ச்சிகள் ஊக்குவிக்கின்றன என்ற அடிப்படையில், சீஸ் டீயின் முக்கிய மூலப்பொருள் தேயிலை என்பதால், டீயின் மூலம் கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் சுவையோடு சேர்த்து இந்த சீஸ் டீயிலும் பெற முடியும் என்பதே இதன் சிறப்பு.

குறிப்பாக, க்ரீன் டீயில் Catechins எனப்படும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இந்த கலவைகள் சருமத்தில் ஃப்ரீ ரேடிகல்களால் ஏற்படும் சேதத்தை தலைகீழாக மாற்ற உதவுகின்றன. ஏனெனில் ஃப்ரீ ரேடிகல்ஸ் அளவுக்கு அதிகமாக இருக்கும்போது உடலின் செல்களில் மிகப்பெரிய சேதத்தை விளைவிக்கும்.

தினமும் 3 கப் (700 மில்லி) தண்ணீர் அல்லது க்ரீன் டீ அருந்திய 32 பேரிடம் மேற்கொண்ட ஒரு 2 வார ஆய்வில், க்ரீன் டீ அருந்தியவர்களின் சருமத்தில் கிட்டத்தட்ட 30 சதவீத அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட் செயல்பாடு இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். மேலும் ப்ளாக் டீயில் Black Tea Polymerized Polyphenols(BTPPs) எனப்படும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது ரத்த சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், அழற்சி மற்றும் புற்றுநோய்க்கான அபாயத்தையும் குறைக்க உதவும். சீஸ் டீயில் கிரீம் சீஸ் மற்றும் வைப்டு கிரீம் வடிவத்தில் முழு கொழுப்பு பால் உள்ளது.

உண்மையில், கிரீம் சீஸ் போன்ற முழு கொழுப்புள்ள பால் பொருட்கள், டைப் 2 நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கான முன்னோடியாக கருதப்படும் உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறி ஆகியவற்றின் குறைவான ஆபத்தோடு தொடர்புள்ளவை.

1,300-க்கும் மேற்பட்டவர்களிடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், முழு கொழுப்புள்ள பால் அதிக அளவில் உட்கொண்டவர்கள், மிகக் குறைந்த அளவு உட்கொண்டவர்களைவிட 50 சதவீதம் குறைவான உடல் பருமன் உடையவர்களாக இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

‘முக்கியமாக ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் ப்ளாக் அல்லது க்ரீன் டீ மற்றும் முழு கொழுப்புள்ள பால் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் சீஸ் டீயை மிதமான அளவில் உட்கொள்வது கண்டிப்பாக ஆரோக்கியமான உணவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், அதில் சர்க்கரை மற்றும் செயற்கை இனிப்பூட்டிகள் சேர்க்கப்படாமல் இருப்பது முக்கியம்’ என்கிறது லக்ஸம்பர்க் பல்கலைக்கழக ஆய்வு. எனவே, சீஸ் டீயை விரும்புகிறவர்கள் இந்த ஆராய்ச்சி முடிவையும் கவனத்தில் கொள்ள வேண்டும்!

பாப்பாவின் சருமத்தைப் பாதுகாக்க...

அழகு தருவதாகவும், ஆரோக்கியம் அளிப்பதாகவும் இருப்பதால் ஆலிவ் எண்ணெய்க்கு எப்போதும் தனி மவுசு உண்டு. இந்த சத்துமிக்க எண்ணெயைக் குழந்தையின் சரும நலத்தைப் பாதுகாக்கும் வகையில் தயாரித்து வழங்குகிறது Bilginoglu.

Bilginoglu ஆலிவ் எண்ணெயானது இயற்கையான முறையில் குழந்தைகளின் மேனியைக் காக்கும் வகையில், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் சருமத்தில் தடவும்போது, சரும நோய்கள் வருவது தவிர்க்கப்பட்டு பளபளப்பும் ஆரோக்கியமும் பெறுகிறது. டயாபர் போடுவதால் ஏற்படும் புண்ணிலிருந்தும் பாதுகாக்கிறது.

மேலும் உடல் முழுவதும் ஆலிவ் எண்ணெயினைத் தடவுவதால் குழந்தைகள் நன்கு வளர்ச்சியையும், ஊட்டத்தையும் பெறுகின்றனர். இத்துடன் எலும்பு மற்றும் தசைகளுக்கு உறுதியையும், எடை ஏற்றத்தையும், சீரான ரத்த ஓட்டத்தையும் தருகிறது. அருங்குணம் கொண்ட இந்த Bilginoglu olive oil குழந்தைகளுக்குக் கிடைத்த இயற்கைப் பரிசு என்றால் அது மிகையில்லை!

- உஷா நாராயணன்