கருமுட்டை இனி அவசியம் இல்லை!எதிர்காலம்

கருத்தரித்தலில் குறைபாடு உள்ள தம்பதியினர் டெஸ்ட் டியூப் பேபி முறை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் முறை நமக்குத் தெரியும். இப்போது உலகம் இன்னும் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்துவிட்டது.

‘கருமுட்டை இல்லாத பெண்கள் இனி கவலைப்பட வேண்டியதில்லை. பெண்களின் தோல் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட செல்களிலிருந்தே ஸ்டெம் செல் தொழில்நுட்பம் மூலம் கருமுட்டையை உருவாக்கிவிட முடியும்’ என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் அமெரிக்க ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஹென்றி.

Sexless reproduction என்ற இந்த புதிய சிகிச்சை முறை குழந்தையில்லாத தம்பதியினருக்கு மட்டுமில்லாமல் குழந்தையில்லாத பலரது கனவையும் நனவாக்கும். இன்னும் 20 ஆண்டுகளில் நடைமுறைக்கும் வந்துவிடும் என்கிறார். இதன்மூலம் மரபுசார்ந்த நோய்கள் இல்லாத, ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்க முடியும் என்பதும் வரப்பிரசாதம் என்கிறார். எங்கேயோ போயிட்டீங்க சார்?!

- என்.ஹரிஹரன்