அலர்ஜி மருந்துகள்



லர்ஜி (ஒவ்வாமை) என்பது இன்றைய வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அன்றாடம் சந்திக்கும் ஒரு விஷயமே. மனிதர்கள் உண்ணும், உபயோகிக்கும் ஒரு பொருளினால் உடலில் ஏற்படும் பக்க விளைவையே அலர்ஜி என்கிறோம்.

கத்தரிக்காய், கருணைக்கிழங்கு மற்றும் விதையுள்ள காய்கறிகள், காய்கனிகள் கெட்டுப் போகாமல் இருக்க மேலே தெளிக்கப்படும் மருந்துகளும் (Antifungal, antibiotic), சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை, அசைவ உணவுகளில் பொதுவாக எல்லாமே (முட்டையிலிருந்து இறைச்சி மற்றும் கடல் நண்டு, மீன், இறால்)...

இப்படி எல்லா வகை உணவுகளும், அதை நவீன முறையில் சமைக்கும்போது பயன்படுத்தப்படும் கெமிக்கல் நிறைந்த மசாலா பொருட்களும், வேறுபட்ட வண்ணங்களைத் தரும் கலர்பொடிகளும் அலர்ஜியை தரலாம். சோப்பு, ஷாம்பு, கண்டிஷனர்ஸ், ஹேர் டை, வாசனைத் திரவியங்கள் மற்றும்வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தப்படுத்த உதவும் திரவ சோப்புகள், தரையைச் சுத்தப்படுத்தும் கெமிக்கல்ஸ், துணி, பாத்திரங்கள், கார் போன்ற வாகனங்களை சுத்தப்படுத்தும் கெமிக்கல்ஸ் என எல்லாவற்றாலும்யாருக்கேனும் அலர்ஜி உருவாகலாம்.

நவீன மருந்துகளும் அலர்ஜி ஆகலாம். பூச்சி, புழுக்கள் கடித்தும் அலர்ஜி ஆகலாம். புதிய துணி மணிகள், நகைகள் போன்றவற்றாலும், வீட்டில்வளர்க்கும் மிருகங்களாலும் (றிமீt கிஸீவீனீணீறீ)    ஒவ்வாமை வரலாம். கட்டிட வேலைகள், சிமென்ட், பெயின்ட், வார்னிஷ் போன்றவற்றின் நெடிகள், காற்றுப் பாதை மூலமாக ஆஸ்துமா போன்ற சுவாசக்குழாய் அலர்ஜிகளும், தோலில் படும் போது சரும அரிப்பு, வீக்கம் போன்றவையும் ஏற்படலாம்.

சில வகை அலர்ஜி மோசமான உயிர் கொல்லும் நோயாகவும் மாறக்கூடும்.மீண்டும் மீண்டும் ஏற்படும் சாதாரண தோல் அரிப்பு போல சாதாரண அலர்ஜியாகவும் இருக்கக்கூடும். யாருக்கு, எதனால், எப்போது ஒவ்வாமை ஏற்படுகிறது என்பதை நோயாளி அறிந்து, மருத்துவரிடம் கலந்தாலோசித்து, அதைத் தவிர்ப்பதால் மட்டுமே முழுவதுமாகக் குணப்படுத்த முடியும். எவ்வளவு மருந்துகள் சாப்பிட்டும்,எவ்வளவு பெரிய மருத்துவர்கள் பரிசோதனை செய்தும், பல ஆண்டுகளாக அலர்ஜியுடன் நோயாளிகள் தவிப்பதற்கு என்ன காரணம்? அவர்கள் மட்டுமே காரணம்! காலையில் குளித்த உடன் வரும்அலர்ஜியா? குளிக்க உபயோகப்படுத்தும் பொருளிலிருந்து வரலாம்.

உணவுக்குப் பின் வரும் அலர்ஜியா? எது அலர்ஜிக்கு காரணம் என எல்லாஉணவையும் சாப்பிட்ட நேரத்தையும் அலர்ஜி வரும் நேரத்தையும் குறித்து வைத்து (டயட் டைரி), மருத்துவரிடம் கலந்தாலோசித்தால் காரணம் பிடிபடும். மருந்து அலர்ஜியா? மருந்துக்கடைகளில் சுய மருத்துவம் செய்வதன் மூலமே, பொதுவாக இவ்வகை அலர்ஜிகள் ஏற்படுகின்றன.  கடைகளில் வாங்கும் ஒவ்வொரு மருந்தையும் எழுதியோ, பில் போட்டோ வாங்கினால் தெரிந்துவிடும். மருத்துவரின் பரிந்துரையின் பேரில், அவர் கூறும் மருந்தையேவாங்கினால் அலர்ஜி ஏற்படுவதைத்தவிர்க்கலாம்.

ஒவ்வாமையில் ஹிஸ்டமைன் எனும் வேதிப்பொருள் தூண்டப்படுவதால், சிறு ரத்தக் குழாய்கள் விரிவடைந்து,பாதிக்கப்படும் உறுப்புகளைப் பொறுத்து நோயாளிக்கு அறிகுறிகளை ஏற்படுத்தும். நரம்பு மண்டலத்தில் அரிப்பை ஏற்படுத்தும். தசைகளிலும் தசைநார்களிலும் சுருக்கத்தை ஏற்படுத்தும். எல்லா சுரப்பிகளையும்வெவ்வேறு சதவிகிதத்தில் சுரக்க வைக்கும். இதனால் தோலில் அரிப்புடன் சிவப்பு நிறத்தில் தடிப்புத் தடிப்பாக மாற்றம் வரும். தசைகளில் வலியும் ஏற்படும்.

Anti Histamine எனப்படும் அலர்ஜிமருந்துகள் (Cetirizine, Levocetirizine, Loratadine, Ebastine, Fexofenadine) மிக சமீபகால கண்டுபிடிப்புகளாக இருந்தாலும், இவற்றுக்கும் பக்கவிளைவுகள் உள்ளன.அலர்ஜி மருந்துகள் மேலே சொன்ன வினைகளைக் குறைத்து, அரிப்பைத் தடுத்து, மூச்சுவாங்குவதை குறைத்து, நீர் சுரப்பதை நிறுத்தி, அந்தந்த உறுப்புகளில் ஏற்படுத்தும் அலர்ஜியை தடுத்து நிறுத்தும்.

பழைய அலர்ஜி மருந்துகளுக்கு இருக்கும் பக்கவிளைவுகளான தூக்கம் வர வைக்கும் தன்மை, மனதை ஒருமைப்படுத்துவதைக் குறைக்கும் பக்கவிளைவு, நா வறட்சி, பார்வை மங்குதல், லேசான தலைவலி என பலவகை பக்கவிளைவுகள் ஏற்படும். இந்த மருந்துகள்சேர்க்கப்பட்ட இருமல் மருந்துகளையோ, அலர்ஜி மருந்துகளை தனியாகவோ,அளவுக்கு அதிகமாக பகலில் எடுத்துக் கொண்டாலோ தூக்கம் வரும். வாகனஓட்டிகள், பகலில் வேலை செய்பவர்கள் தவிர்க்க வேண்டும்.

நோயாளிகள் ஓய்வு எடுக்கும்போது பகலிலோ, மற்றபடி இரவில் மட்டுமோ எடுப்பதே நல்லது.அரிப்பு ஏற்படும் போது தரும்மருந்துகளை, மக்கள் மருந்துக்கடையில்தாங்களாகவே கேட்டு வாங்கி, சர்வசாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், நோயின் ஆரம்ப அறிகுறிகளுக்கு மருந்து எடுத்து, அதனால் நோய்க்குக் காரணமான நோயின் மூலத்தை அறியாமல் விடுவது, நோயைத் தாண்டி நோயினால் ஏற்படும் பாதிப்புகளையும் சிகிச்சை செய்ய நேரும்... மருத்துவரைக் குழப்பவும் கூடும்.

இதனால் பல தேவையில்லாத மருந்துகளைஉட்கொள்ளவும், தேவையில்லாத பரிசோதனைகளை மேற்கொள்ளவும் வேண்டி வரும். காலதாமதத்தால் சாதாரண குடும்பமருத்துவரை தாண்டி, ஆபத்தில் இருக்கும் நோயாளிகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்ந்து குணப்படுத்தவும் நேரும்.

ஜாக்கிரதை!எவ்வளவு மருந்துகள் சாப்பிட்டும், எவ்வளவு பெரிய மருத்துவர்கள் பரிசோதனை செய்தும், பல ஆண்டுகளாக அலர்ஜியுடன் தவிப்பதற்கு என்ன காரணம்? அவர்கள் மட்டுமே காரணம்! சில வகை அலர்ஜி மோசமான உயிர் கொல்லும் நோயாகவும் மாறக்கூடும்.

டாக்டர் மு.அருணாச்சலம்