உடற்பயிற்சிக்கான உன்னத அறிவுரைகள்!



இப்போது அனைத்து வயதினரும் ஆண், பெண் என வித்தியாசம் இல்லாமல் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். ஏரோபிக்ஸ், நடைப்பயிற்சி, மெது ஓட்டம், வேக ஓட்டம், பளு தூக்குதல் உள்பட பல விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 இவை அனைத்தையும் பலர் மிக மிதமாகவும் ஒரு சிலர் சற்று சிரமத்துடனும் மிகச் சிலர் மிகக் கடினமாகவும் செய்து வருவது அனைவரும் அறிந்ததே. உடற்பயிற்சியை உன்னதமாக்க உதவும் கைடுலைன்ஸ் உங்களுக்காக..

*40 வயதுக்கு மேல்

உள்ளவர்கள் 30 நிமிடங்கள் அவர்களுக்கான உடற்பயிற்சிகளை (Moderate), மிதமான வேகத்தில், வாரம் 4 முதல் 5 நாட்கள் செய்தாலே போதுமானது.

*25 வயதுக்கு குறைந்தவர்கள், 25 முதல் 40 வயது வரையிலான வயதுடையோர் 60 நிமிடங்கள் தினமும் (Moderately high intensity to moderate intensity) அவர்களின் வயதுக்குப் பொருத்தமாக உடற்பயிற்சிகளை செய்ய வேண்டியது ஆரோக்கியத்திற்கு உத்தமம்.

*உலக ஆரோக்கிய மையத்தின் (World Health Organization)   அறிவுரைப்படி வயதில் சற்று முதியவர்கள் (சிலர், அவர்களுக்கு வயது கூடி முதியவரானால் கூட, ‘நான் என்றும் இளைஞன்தான்’ என வாதிடுவர்!) மனதை என்றும் இளமையாக வைத்துக்கொள்ள முடியும். உடலோ முழுமையாக முதுமை அடைவதை  ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள ஏரோபிக்ஸ், நடைப்பயிற்சி, தசைகளை நீட்டிச்சுருக்குதல் (Flexibility) மற்றும் சிறியதாக பளு தூக்குவது (Strength training) சாலச்சிறந்தவை.

இப்போதைய மக்களின் உணவுப் பழக்க வழக்கங்களின்படி கார்போஹைட்ரேட் (Carbohydrate), கொழுப்பு (திணீt), புரோட்டீன் (Protein), அமினோ அமிலம் (Amino acids), நார்ச்சத்து (fiber) மற்றும் பல தேவைகளை, மிக அதிகமாகவோ, மிகக் குறைவாகவோ சாப்பிட்டு வருகின்றனர் என்கிறது உலக அளவிலான ஆராய்ச்சி. இந்த விஞ்ஞான உண்மையின் காரணமாகத்தான் உலகமெங்கும் மிகவும் குண்டானவர்கள், இதயப் பிரச்னை உள்ளவர்கள், நீரிழிவால் உடல் உருகி அழுது வாழ்பவர்கள்,

 கேன்சர் நோயால் வாடி, வெந்து மடிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இப்போது நம் இந்தியா இதில் முன்னணியில் வந்து கொண்டிருப்பது மிகவும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது.விளையாட்டு வீரர்கள் பல மணி நேரம் விளையாடுகிறார்கள். மேலும் பலதரப்பட்ட ஓட்டங்கள், சைக்கிள் ஓட்டுதல், நீந்துதல், பளு தூக்குதல் எனச் செய்து, அத்துடன் அவர்களது உடலுக்கும் விளையாட்டுக்கும் தேவையான (Balanced diet) உணவு வகைகளை உண்பதால் உடலின் வலிமை மேலும் அதிகரிக்கிறது.

சராசரி மனிதர்கள் தங்களின் வேலைப்பளுவை மனதில் வைத்து தினசரி உடற்பயிற்சிகளை அமைத்துக் கொள்ளலாம். மெதுவான, மிதமான நடைப்பயிற்சி, வேகமான நடைப்
பயிற்சி, வீட்டு வேலைகள், மாடிப்படிகளில் ஏறி இறங்குவது, செல்ல நாய்க்குட்டியோடு ஒரு பயிற்சி நடை, வீட்டு முற்றத்தில் குடும்பத்தினரோடு ஒரு சிறிய கால்பந்து, கைப்பந்து,
இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ், டென்னிஸ், கூடைப்பந்து என பல பயிற்சிகளை செய்யலாம்.

ஏரோபிக்ஸ், நீந்துதல், சைக்கிள் ஓட்டுதல், பளு தூக்குதல் என மேலே கூறியவற்றை தினம் 30 முதல் 60 நிமிடங்கள் வரை - உங்கள் தினசரி வேலைப் பளுவை மனதில் கொண்டு  செய்து, உடற்பயிற்சிக்கும் வேலைப்பளுவுக்கும் ஏற்றவாறு, சரிவிகித உணவை எடுத்துக்கொள்வது மிக அவசியம்.

*அமெரிக்காவின் மகப்பேறு கல்லூரியின் அறிவுரை இது...


தாய்மார்கள் குழந்தை பாக்கியம் அடைந்தவுடன் உடற்பயிற்சி செய்வதால் அது குழந்தைக்கும் நல்லது. சுகப்பிரசவத்துக்கும் உகந்தது. தாய்க்கும் சிறந்தது. American College of Obstetricians and Gynecologists (ACOG) யின் அறிவுரையின்படி, மருத்துவர்களின் அறிவுரைப்படி அந்தக் காலகட்டத்துக்கு ஏற்றவாறு தாய்மார்கள் சிறுசிறு உடற்பயிற்சிகளை செய்வது அவசியம்.

குழந்தைப்பேறு அடைந்தவுடன் எந்த ஒரு வேலையும் செய்யாமல், ஆடாமல் அசையாமல் இருக்கும் தாய்மார்கள் பிரசவ வலியால் அதிகம் துடிப்பதாகவும், பிரசவத்துக்கு நீண்ட நேரம் ஆவதாகவும், அதிகமாக அறுவை சிகிச்சையிலேயே (Cesarean) குழந்தைகள் பிறப்பதாகவும்  உறுதிபடுத்தியுள்ளனர்.

மருத்துவர்களின் அறிவுரைப்படி, சிறிய வீட்டு வேலைகளையும், ஒவ்வொரு மாதத்துக்கும் ஏற்றவாறு பிரசவத்துக்கு ஏற்ற, குழந்தையை பாதிக்காத சிறிய உடற்பயிற்சியை தொடர்ந்து செய்யும் தாய்மார்கள், மிகக்குறைந்த நேரத்தில், அதிக பிரசவ வேதனை இல்லாமல், சுகப்பிரசவத்தோடு, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்று, தாங்களும் ஆரோக்கியமாக, உடல் உறுதியான தாயாக இருப்பது நூறு சதவிகித உண்மை!

சராசரி மனிதர்கள் தங்களின் வேலைப்பளுவை மனதில் வைத்து தினசரி உடற்பயிற்சிகளை அமைத்துக் கொள்ளலாம்.

மெதுவான, மிதமான நடைப்பயிற்சி, வேகமான நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள், மாடிப்படிகளில் ஏறி இறங்குவது, செல்ல நாய்க்குட்டியோடு ஒரு பயிற்சி நடை, வீட்டு முற்றத்தில் குடும்பத்தினரோடு ஒரு சிறிய கால்பந்து, கைப்பந்து, இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ், டென்னிஸ், கூடைப்பந்து என பல பயிற்சிகளை செய்யலாம்.

(ஆரோக்கியம் தொடரும்!)

முனைவர்
மு.ஸ்டாலின் நாகராஜன்