ஏழ்மை



ஃபேக்ட் +

*ஆண்டுக்கு 14 லட்சம் ரூபாய்க்கும் அதிக வருமானம் ஈட்ட முடிந்தால், நீங்கள் உலகின் 4 சதவிகித செல்வந்தர்களில் ஒருவர்!
*உலகில் ஒவ்வொரு நாளும் 22 ஆயிரம் குழந்தைகள் வறுமை காரணமாக இறக்கின்றனர் என்கிறது யுனிசெஃப் நடத்திய ஆய்வின் அதிர்ச்சி முடிவு.
*80 சதவிகித மனித குலத்துக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் கூட வருமானம் கிடையாது.
* சீனாவில் 10 கோடி பேர் தினமும் 70 ரூபாய்க்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றனர்.
*உலகில் 100 கோடி பேர் திறந்தவெளி கழிப்பறையையே இன்றும் பயன்படுத்துகின்றனர்.
*உலகின் ஏழ்மையான 350 கோடி மக்களின் மொத்த சொத்து மதிப்பானது, 85 செல்வந்தர்களின் சொத்து மதிப்புக்குச் சமம்!
*ஆலன், சவுத் டெகோட்டா போன்ற அமெரிக்காவின் ஏழ்மைப் பகுதி மக்களில் 96 சதவிகிதத்தினர் அமெரிக்கபூர்வீகக் குடிகளே.
*இந்தியா, சீனா, நைஜீரியா, பங்களாதேஷ், காங்கோ ஆகிய 5 நாடு
களில்தான், உலகின் 64 சதவிகித ஏழ்மை மக்கள் இருக்கின்றனர்.
*உலகின் 48 சதவிகித செல்வங்கள், உலகின் ஒரு சதவிகித செல்வந்தர்களிடமே இருக்கிறது.
*இன்று இரவு உலகில் 10 லட்சம் மக்கள் பசியோடு உறங்கச் செல்வார்கள்.

- சூர்யா