ஒரே நாளில் உயர்தர சிகிச்சை!



இன்றைய உலகினை, மருத்துவம் சார்ந்து அச்சுறுத்தும் காரணிகளில், ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவக்கூடிய தன்மை இல்லாத நோய்கள் பருமன், நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம்.

இந்த நோய்களால் பல காலமாக பாதிக்கப்பட்டிருப்பவர்கள், சமீபத்தில் இவற்றால் பாதிப்புக்கு ஆளானவர்கள் என எண்ணற்றோர் நிரந்தரமான, உறுதியான மருத்துவ தீர்வு இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

நீங்கள், உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் யாராவது இதுபோன்ற நோய்களில் அவதிப்பட்டு வரலாம். இவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை முக்கிய குறிக்கோளாக கொண்டு, கோவை எல்.சி. மையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவர் டாக்டர் பி.எஸ். ராஜன்.  இனி, மேலே குறிப்பிடப்பட்ட நோய்களுக்கு சிறந்த தீர்வு மையமாக உள்ள இந்நிறுவனத்தில் செயல்பட்டு வரும் சிறப்பு சிகிச்சை பிரிவுகள் பற்றி அறிந்து கொள்வோம்.

* எல்.சி. ஹெர்னியா கிளினிக்ஸ்
* எல்.சி. மகளிர் நலம்
* எல்.சி. உடல் பருமன் கிளினிக்ஸ்
* எல்.சி. எண்டோஸ்கோப்பி கிளினிக்ஸ்

இந்த சிறப்பு சிகிச்சை பிரிவுகளில், நோயாளிகளின் காலம், பண விரயம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தரமான ஒருநாள் இருப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இதுதவிர, லேப்ரோஸ்கோப்பி சிகிச்சைகள் மூலம் சிறுதுளைகள் வழியாக உபகரணங்களை உட்செலுத்தி அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.

இதனால், அறுவை சிகிச்சை வலி,  அதனால் ஏற்படும் பெரிய தழும்பு, அதிக ரத்த சேதம் எதுவும் ஏற்படாது. நோயாளிகள்  பல நாள் ஓய்வு எதுவும் தேவையில்லாமல்  சிகிச்சை முடிந்த ஓரிரு நாட்களில் அன்றாட செயல்களைச் செய்யவும், இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவும் முடிகிறது.     

இந்நிறுவனத்தின் தலைவர் டாக்டர் பி.எஸ். ராஜன்,  தழும்பு இல்லாத இயற்கை துவார வழி எண்டோஸ்கோப்பி சிகிச்சைகளில் குடல்வால் நீக்கம் செய்த உலகின் முதல் மருத்துவர் மற்றும் இந்த முறையில், பித்தப்பை அகற்றிய முதல் ஆசிய மருத்துவர். தென்னிந்தியாவில், எண்டோஸ்கோப்பி மூலம் தழும்பு இல்லாமல் உணவுக்குழாய் அடைப்பிற்கு மயோட்டமி சிகிச்சை செய்த முதல் மருத்துவர் என்ற சிறப்பிற்கும் உரியவர்.

எல்.சி. மருத்துவ அறக்கட்டளை ‘சென்னை வெள்ள நிவாரணப் பணிகள்,’ ‘விர்ச்சுவல் ரெஸ்க்யூ ஃபோர்ஸ்' போன்ற அமைப்புகளை, பன்னாட்டு நண்பர்களை ஒருங்கிணைத்து ஏராளமான சமூக சேவைகள் ஆற்றி வருகிறது. வறுமையில் உள்ள மருத்துவ மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கிறது.   

தொடர்புக்கு:எண்டோஸ்கோப்பி, லேப்ரோஸ்கோப்பி சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்.
# 60, ஆர்ஆர் லே அவுட், (ரெக்ஸ் மருத்துவமனை அருகில்), பூ மார்க்கெட் பேருந்து நிறுத்தம்,
ஆர்.எஸ்.புரம், கோவை-641 002.
தொலைபேசி: 0422-4221211, மொபைல்: 9789622334, 9789633220, 9842006728.
 மின்னஞ்சல்: elceclinics@gmail.com இணையதளம்: www.elceclinics.com