தமிழ்நாடு ரேஷன் கடைகளில் வேலை!வாய்ப்பு

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பொது விணியோக திட்டத்தின்கீழ் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் தற்போது திருப்பூர், திருவண்ணாமலை, கடலூர், விருதுநகர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், விழுப்புரம், தஞ்சாவூர், காஞ்சிபுரம், கரூர், ராமநாதபுரம், கோயம்
புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் சென்னை போன்ற மாவட்டங்களிலுள்ள மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களினால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிகளை நிரப்ப தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்தப் பணிகளுக்கு மொத்தம் 2181 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

கல்வித் தகுதி: விற்பனையாளர் (Sales Person) பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.கட்டுநர் (Packer) பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது தகுதி: விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டு முதல் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் இந்த ரேஷன் கடை விற்பனையாளர் பணி மற்றும் கட்டுநர் பணிக்கு நேரடி நியமனம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 150, கட்டுநர் பணிக்கு ரூ.100 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். SC/ ST/ PWD/ ஆதரவற்ற விதவைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்ப முறை:விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்கம், மொத்த கூட்டுறவு விற்பனை பண்டக சாலை, வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் பெற்றுக்கொள்ளலாம்.  அஞ்சல் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அந்தந்த மாவட்ட இணைப்பதிவாளர்/ தலைவர், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:  அந்தந்த மாவட்ட வாரியாக 8.7.2020 முதல் 31.7.2020 வரை விண்ணப்பம் சமர்ப்பிக்க தேதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விவரங்களை அறிய TN Ration Shop Recruitment 2020 Application form & OFFICIAL NOTIFICATION என்று பதிவிட்டு இணையதளத்தில் தேடிப் பார்க்கலாம்.