வேலை ரெடி!வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி.  இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

மத்திய அரசில் ஜியாலஜிஸ்ட் பணி!

நிறுவனம்: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி-யின் கம்பைண்ட் ஜியோ சயின்டிஸ்ட் அண்ட் ஜியாலஜிஸ்ட் தேர்வு பற்றிய அறிவிப்பு
வேலை: 4 துறைகளில் வேலை உண்டு. ஜியாலஜிஸ்ட், ஜியோ ஃபிசிஸ்ட், கெமிஸ்ட் மற்றும் ஜூனியர் ஹைட்ராலஜிஸ்ட்
காலியிடங்கள்: மொத்தம் 70
கல்வித்தகுதி: தொடர்புடைய துறைகளில் முதுகலைப் படிப்பு
வயது வரம்பு: எல்லா வேலைகளுக்குமே குறைந்தபட்ச வயது 21. அதிகபட்ச வயது முதல் 3 வேலைக்கும் 32க்குள்ளும் 4வது வேலைக்கு மட்டும் 35க்குள்ளும் இருத்தல் வேண்டும்
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
தேர்வு தேதி: 29.6.18
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 16.4.18
மேலதிக தகவல்களுக்கு: www.upsc.gov.in

10வது படித்தவர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டில் வேலை!

நிறுவனம்: சுப்ரீம் கோர்ட்
வேலை: ஜூனியர் கோர்ட் அட்டன்டெண்ட் மற்றும் சேம்பர் அட்டன்டெண்ட்
காலியிடங்கள்: மொத்தம் 78. இதில் முதல் பிரிவில் 65, இரண்டாம் பிரிவில் 13 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித்தகுதி: 10வது படிப்புடன் ஓட்டுநர் அனுபவம் லைசென்ஸ் தேவை
வயது வரம்பு: 18 முதல் 27 வரை
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 15.4.18
மேலதிக தகவல்களுக்கு: www.supremecourtofindia.nic.in

தொழில்நுட்ப ஆய்வு நிறுவனத்தில் வேலை!

நிறுவனம்: நேஷனல் டெக்னிக்கல் ரிசர்ச் ஆர்
கனைசேஷன் எனும் மத்திய அரசின் தொழில்
நுட்பத்துக்கான ஆய்வு நிறுவனத்தில் வேலை
வேலை: எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஜியோ இன்ஃபர்மேடிக்ஸ் எனும் 3 துறைகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 62
கல்வித்தகுதி: முதல் வேலைக்கு எலக்ட்ரானிக்ஸ் தொடர்புடைய படிப்புகளில் முதுகலைப் படிப்பும், இரண்டாவது வேலைக்கு கம்ப்யூட்டர் தொடர்புடைய படிப்பில் டிகிரியும், மூன்றாம் வேலைக்கு ஜியோ இன்ஃபர்மேடிக்ஸ் படிப்பில் முதுகலைப் படிப்பும் அவசியம்
வயது வரம்பு: 30க்குள்
தேர்வு முறை: மெரிட் மற்றும் எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 14.4.18
மேலதிக தகவல்களுக்கு: www.ntro.gov.in     

தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் டிரைவர் வேலை!

நிறுவனம்: தமிழ்நாடு டூரிஸம் டெவலப்மென்ட் கார்பரேஷன் லிமிடெட்
(டி.டி.டி.சி) எனும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி நிறுவனத்தில் வேலை
வேலை: டிரைவர், மெக்கானிக், எலக்ட்ரிஷியன் உட்பட 16 துறைகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 65
கல்வித்தகுதி: 8வது படிப்பு, +2, டிகிரி, பி.காம், ஆர்ட்ஸ் டிகிரி, சில படிப்புகளில் டிப்ளமோ, பி.டெக் மற்றும் ஐ.டி. போன்ற படிப்புகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இந்த வேலைகளில் ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு: 18 முதல் 30 வரை
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 7.4.18
மேலதிக தகவல்களுக்கு: www.tamilnadutourism.org

எஞ்சினியரிங் பட்டதாரிகளுக்கு சயின்டிஸ்ட் பணி!

நிறுவனம்: பொருட்கள் மற்றும் சேவைகளுக்குத் தரச்சான்று கொடுக்கும் மத்திய அரசின் பீரோ ஆஃப் இண்டியன் ஸ்டேண்டர்டு நிறுவனம்
வேலை: அறிவியல் ஆராய்ச்சியாளர் (சயின்டிஸ்ட்) வேலையில் ‘பி‘ பிரிவு
காலியிடங்கள்: மொத்தம் 109. மெக்கானிக்கல், சிவில், கெமிக்கல்
என 9 துறைகளில் காலியிடங்கள் இருக்கின்றன
கல்வித்தகுதி: பி.இ. மற்றும் பி.டெக். படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மைக்ரோ பயாலஜி துறைக்கு அதே பாடப்பிரிவில் முதுகலைப் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு: 21 முதல் 30 வரை
தேர்வுமுறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 2.4.18
மேலதிக தகவல்களுக்கு: www.bis.org.in

MBA பட்டதாரி களுக்கு SBI வங்கியில் அதிகாரி பணி!

வேலை: 3 பிரிவுகளில் சிறப்பு அதிகாரிகள் எனும் ஸ்பெஷலைஸ்டு ஆபிஸர் பணி
காலியிடங்கள்: மொத்தம் 119. இதில் ஸ்பெஷல் மேனேஜ்மென்ட் எக்சிகியூட்டிவ் பிரிவில் 35, டெப்யூட்டி ஜெனரல் மேனேஜர்(சட்டம்) பிரிவில் 2 இடங்களும் மற்றும் டெப்யூட்டி மேனேஜர்(சட்டம்) பிரிவில் 82 இடங்களும் காலியாக உள்ளன
கல்வித்தகுதி: முதல் வேலைக்கு சி.ஏ, ஐ.சி.டபிள்.யு, எம்.பி.ஏ போன்ற படிப்புகளும் மற்ற இரு வேலைகளுக்கும் சட்டப்
படிப்பு அவசியம்
வயது வரம்பு: முதல் வேலைக்கு 30 முதல் 40 வரையும், இரண்டாவது வேலைக்கு 42 முதல் 52 வரையும், மூன்றாம் வேலைக்கு 25 முதல் 35 வரை இருத்தல் வேண்டும்
தேர்வு முறை: 3 வேலை
களுக்குமே நேர்முகத் தேர்வு மூலம் வேலை கொடுக்கப்படும் என்றாலும் மூன்றாவது வேலைக்கு கூடுதலாக எழுத்துத் தேர்வும் இருக்கும்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 7.4.18
மேலதிக தகவல்களுக்கு: www.sbi.co.in

தொகுப்பு: டி.ரஞ்சித்