கால்நடை ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெறலாம்!



அட்மிஷன்

விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது!

மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்தியன் வெட்னரி ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டானது உத்திரப்பிரதேச மாநிலத்தில் இயங்கிவருகிறது.

இவ்வாராய்ச்சி நிறுவனத்தில் கால்நடை மருத்துவம் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு 2018-19ம் ஆண்டிற்கான முனைவர் பட்டம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேசிய அளவில் நடத்தப்படும் கால்நடை துறைகளுக்கான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் இவ்வாண்டுக்கான முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொள்வர்.

துறைகள்

1. Animal Biochemistry
2. Animal Biotechnology
3. Animal Genetics & Breeding
4. Animal Nutrition
5. Livestock Production & Management
6. Livestock Products Technology
7. Poultry Science
8. Vet. Microbiology
9. Vet.extension Education
10. Vet. Gynaecology
11. Vet. Medicine
12. Vet. Parasitology
13. Vet.Patology
14. Vet. Pharmacology
15. Vet.Pysiology
16. Vet. Public Health & Epideminology
17. Vet. Surgery & Radiology

தேர்வு செய்யும் முறை

இந்திய அரசின் கல்வி நிறுவனத்தில் கால்நடை ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்புவோர்களுக்கு மேற்கூறிய துறைகளில் இருந்து ஒரு எழுத்துத் தேர்வு தேசிய அளவில் நடத்தப்படும். தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள் ஜூன் மாதம் நடத்தப்படும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு முனைவர் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.

கல்வித் தகுதி

விண்ணப்பிக்க விருப்பமும் ஆர்வமும் உள்ள மாணவர்கள் இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்களில் குறிப்பிட்ட கால்நடை துறைகளில் முதுநிலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். மேலும் பொது மற்றும் OBC மாணவர்கள் தன் முதுநிலையில் 60% மதிப்பெண்ணும் மற்றும் sc/st மாணவர்கள் 50% மதிப்பெண்ணும் பெற்றிருத்தல் அவசியம். மேலும் விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 1, 2018 தேதியின்படி 23 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் www.ivri.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்துகொள்ளலாம். பொது மற்றும் OBC மாணவர்கள் ரூ.1200, sc/st மாணவர்கள் ரூ.1000 விண்ணப்பக் கட்டணமாக செலுத்தி அதன் ரசீதுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.4.2018

மேலும் விவரங்களுக்கு www.ivri.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

- வெங்கட்