ஜிப்மரில் இளநிலை மருத்துவம் படிக்கலாம்!
நுழைவுத் தேர்வு
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆஃப் போஸ்ட் கிராஜூவேட் எஜூகேஷன் அண்ட் ரிசர்ச் மருத்துவப் பல்கலைக்கழகம், மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் இயங்கிவருகிறது.
 இதில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்ய அகில இந்திய நுழைவுத் தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 4½ ஆண்டு காலம் மற்றும் ஒரு வருட கட்டாய இன்டர்ன்ஷிப் படிப்பான இப்படிப்பிற்கு பாண்டிச்சேரி ஜிப்மரில் 150 இடங்களும், காரைக்காலில் 50 இடங்களும் என மொத்தம் 200 இடங்கள் உள்ளன.
இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடஒதுக்கீட்டு விவரம் பிரிவு புதுச்சேரி காரைக்கால் மொத்தம் பொது இடங்கள் 55 19 74 பிறபிற்படுத்தப்பட்டவர் 28 9 37 ஆதிதிராவிடர் 15 5 20 பழங்குடியினர் 7 2 9 புதுவை - பொது 22 9 31 புதுவை - பிற பிற்படுத்தப் பட்டவர் 10 3 13 புதுவை - ஆதிதிராவிடர் 5 1 6 புதுவை - பழங்குடியினர் 3 1 4 என்.ஆர்.ஐ. 5 1 6 150 50 200
என்றவாறு ஒதுக்கப்பட்டுள்ளன.இவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கு 6 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.கல்வித்தகுதி: +2-ல் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிர் தொழில்நுட்பப் பாடங்களை எடுத்து படித்திருக்க வேண்டும். மேலும் இப்பாடங்களில் பொதுப்பிரிவினர் குறைந்தது 60 விழுக்காடும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் குறைந்தது 50 விழுக்காடும் மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். தற்போது பொதுத்தேர்வு எழுதிக் கொண்டுள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: விண்ணப்பிக்க விரும்புவோருக்கு 31.12.2018 தேதி அடிப்படையில் 17 ஆண்டுகள் வயது நிரம்பியிருக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள். இத்தேர்விற்கு www.jipmer.puducherry.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணமாகப் பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர் ரூ.1500, ஆதிதிராவிடர், பழங்குடியினர் ரூ.1200, என்.ஆர்.ஐ. ரூ.3000 செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு வழியாகச் செலுத்தலாம்.
ஆன்லைன் நுழைவுத் தேர்வு மாநில, மத்திய அரசின் பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையில் இருக்கும். நுழைவுத் தேர்வுகள் நாடு முழுவதும் உள்ள 120 மையங்களில் நடைபெற உள்ளது. இதில், 2 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 3ம் தேதி எம்.பி.பி.எஸ். நுழைவுத் தேர்வு இரு பிரிவுகளாக நடக்கிறது. முதல் பிரிவுக்குக் காலை 10 மணி முதல் 12.30 மணி வரையும், 2ம் பிரிவுக்கு மதியம் 3 மணி முதல் மாலை 5.30 மணி வரை தேர்வு நடைபெறும். இத்தேர்வு முடிவுகள் ஜூன் 20ம் தேதிக்குள் வெளியிடப்படும். நுழைவுத் தேர்வின்போது மாணவர்கள் வாட்ச், கால்குலேட்டர் போன்ற எந்த உபகரணங்களையும் பயன்படுத்தக் கூடாது.
தேர்வு நடைபெறும் இடத்துக்கு 2 மணி நேரத்துக்கு முன்பே மாணவர்கள் வந்து விட வேண்டும். வினாத்தாளில் இயற்பியில் 60 வினாக்களும், வேதியியலில் 60 வினாக்களும், உயிரியியல் 60 வினாக்களும், ஆங்கிலம், ஆங்கில காம்பிரிஹென்சன் 10 வினாக்களும், லாஜிக்கல் மற்றும் குவாண்டிடேட்டிவ் ரீசனிங் 10 வினாக்களும் என மொத்தம் 200 வினாக்கள் இருக்கும்.
முக்கிய நாட்கள்
ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 13.4.2018 நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்ய: 21.5.2018 முதல் 3.6.2018 வரை தேர்வு நாள்: 3.6.2018 (ஞாயிறு) காலை: 10.00 am to 12.30 pm, மாலை: 3.00 pm to 5.30 pm மேலும் விவரங்களுக்கு www.jipmer.puducherry.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும். நேரில் தொடர்பு கொள்ள:The Dean (Academic), III Floor, Academic session, JIPMER - Academic Centre, Dhanvantri Nagar (Po), Puducherry - 605 006, தொலைபேசி: 0413-2298283
|