நுழைவுத் தேர்வுகளில் வெற்றிபெற பயிற்சி அவசியம்!பயிற்சி

இன்றைய காலகட்டத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தன்னை தயார்படுத்திக்கொள்பவன் வெற்றிபெறுகிறான். படிப்பானாலும் சரி வேலையைப் பெறுவதிலும் இது இன்றைக்கு கட்டாயம் தேவைப்படுகிறது. போட்டி நிறைந்த இந்த உலகத்தில் வெற்றிப்படியில் ஏறி நிற்க முயற்சியும் பயிற்சியும் மிகவும் இன்றியமையாததாகிவிட்டது.

வெற்றிப்படியில் ஏறத் துடிக்கும் நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களின் மனதை தெளிவுபடுத்த சென்னையைச் சேர்ந்த NEET தேர்வுக்கு பயிற்சியளித்து நடப்பாண்டில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு கல்லூரியில் சேர வழிவகை செய்துள்ள ஆர்ஜிஆர் அகாடெமியின் நிறுவனர் இரா.கோவிந்தராஜ் கூறும் கருத்துகளை இனி பார்ப்போம்.

‘‘இப்போது மாணவர்கள் உயர்கல்வி பெற தகுதி தேர்வுகளை எழுதி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். உதாரணமாக, தற்போது கட்டாயப் படுத்தப்பட்டுள்ள நுழைவுத் தேர்வான (NEET) தேசிய தகுதிக்கா(ண்) நுழைவுத் தேர்வை +2 படித்த மாணவர்கள் MBBS/BDS போன்ற படிப்புகளில் சேர, இந்தத் தேர்வை எழுதி தகுதி பெற்றால்தான் அவர்கள் மருத்துவர் ஆவதற்கான கனவு நனவாகும்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் மாநிலக் கல்வி வழியில் பயிலும் மாணவர்களுக்கு இது சிரமமான விஷயம். மற்றும் இவர்களால் முடியாது என்ற விஷயங்களைத் தெரிந்தோ தெரியாமலோ பலர் பரப்பி வருகின்றனர்.

மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களானாலும் மத்திய பாடத்திட்டமானாலும் சரி, படிக்கும் விஷயங்களில் மாறுபாடு கிடையாது. எந்தப் பாடத்திட்டத்தில் படித்தாலும் கோட்பாடுகளும், சூத்திரங்களும் வழிமுறைகளிலும் எந்தவித வேறுபாடும் கிடையாது’’ என்கிறார்.

இந்நிறுவனத்தின் கல்வித்துறை இயக்குநரான பிரபுக்குமார் துரைசாமி கூறும்போது, ‘‘இந்த வருடம் +2 படித்த மாணவர்களுக்கு அவர்களுடைய தேர்வு முடிந்தவுடன் 30 நாட்கள் சிறந்த பயிற்சியை அளித்து அதற்கான வெற்றிமுறைகளை பயிற்றுவித்து, அவர்களுக்கு தன்னம்பிக்கையும் ஊக்கத்தையும் அளித்து, வெற்றி பெற செய்து மாநிலவழிக் கல்வியில் பயிலும் மாணவர்களும் இந்த NEET தேர்வில் வெற்றி பெறுவதைச் சுலபமாக்கியுள்ளோம்’’ என மனநெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.

இந்த நிறுவனம் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியில் கடந்த 10 வருடகால அனுபவத்தின் மூலமாக இதை செய்துகாட்டி வருகிறது. மேலும் 2018-2019-ம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மருத்துவராக கனவு இருந்தால் 9176552121 தொடர்பு எண்ணில் அணுகி அவர்களுடைய ஆலோசனையைப் பெற்று பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன் பெறலாம்.

-திருவரசு