வேலை ரெடி!வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி.  இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு
அறிவிப்புகள் இங்கே...

எல்லைக்காவல் படையில் கான்ஸ்டபிள் வேலை

நிறுவனம்: ஐ.டி.பி.பி எனப்படும் இந்தோ- திபேத் பார்டர் போலீஸ் எனும் இந்திய திபேத்திய எல்லைக்காவல் படையில் வேலை
வேலை: கான்ஸ்டபிள் பதவியிலான டிரைவர் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 134
கல்வித்தகுதி: 10வது படிப்புடன் 2 வருட அனுபவத்துடன்கூடிய டிரைவர் வேலை மற்றும் அதற்கான லைசென்ஸ்
வயது வரம்பு: 21 முதல் 27 வரை
தேர்வு முறை: எழுத்து, உடல்திறன் சோதிப்பு, தொழில்திறன் சோதிப்பு, மருத்துவ சோதனை, மெரிட் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 15.3.18
மேலதிக தகவல்களுக்கு: www.itbpolice.nic.in

எய்ம்ஸ் மருத்துவமனையில் நர்சிங் ஆபீஸர் வேலை!

நிறுவனம்: ஆல் இண்டியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சர்வீசஸ் எனும் மத்திய அரசு மருத்துமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக்கான நிறுவனத்தின் போபால் கிளை
வேலை: நர்சிங் ஆபீஸர் மற்றும் சீனியர் நர்சிங் ஆபீஸர்
காலியிடங்கள்: மொத்தம் 700. இதில் முதல் பிரிவில் 600 மற்றும் இரண்டாம் பிரிவில் 100 இடங்கள் காலியாக உள்ளன.
கல்வித்தகுதி: 4 வருட படிப்பான பி.எஸ்சி., நர்சிங் அல்லது அதற்கு இணையான படிப்பு
வயது வரம்பு: இரண்டு பிரிவு வேலைக்குமே அடிப்படை வயது 21. ஆனால் முதல் பிரிவுக்கு உச்சபட்ச வயது 30, இரண்டாம் வேலைக்கு உச்சபட்ச வயது 35
தேர்வு முறை: எழுத்து, திறன் தேர்வு மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 6.3.18
மேலதிக தகவல்களுக்கு: www.aiimsbhopal.edu.in

போக்குவரத்துத் துறையில் வாகன ஆய்வாளர் பணி!

நிறுவனம்: டி.என்.பி.எஸ்-யின் டிரான்ஸ்போர்ட் சப்பார்டினேஷன் சர்வீஸின் கீழ் வேலைவாய்ப்பு அறிவிப்பு
வேலை: கிரேட் 2 பதவியிலான மோட்டார் வெஹிக்கல் இன்ஸ்பெக்டர் எனும் வாகன
ஆய்வாளர் பணி
காலியிடங்கள்: மொத்தம் 113
கல்வித்தகுதி: 10வது படிப்பு அல்லது ஆட்டோமொபைல்/மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படிப்பில் டிப்ளமோ
வயது வரம்பு: 21க்குள். சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 13.3.18
மேலதிக தகவல்களுக்கு: www.tnpsc.gov.in

பட்டதாரிகளுக்குத் தொலைத் தொடர்புத் துறையில் வேலை!

நிறுவனம்: டாட் எனப்படும் மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை(டிபார்ட்மென்ட் ஆஃப் டெலி கம்யூனிகேஷன்)
வேலை: அசிஸ்டென்ட் டைரக்டர் மற்றும்
ஜூனியர் டெலிகாம் ஆபீஸர்
காலியிடங்கள்: மொத்தம் 321. இதில் முதல் பிரிவில் 176, இரண்டாம் பிரிவில் 145 இடங்கள் காலியாக உள்ளன
கல்வித்தகுதி: டிகிரி
வயது வரம்பு: 56க்குள்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 5.3.18
மேலதிக தகவல்களுக்கு: www.dot.gov.in

தமிழக அரசில் பார்மசிஸ்ட் பணி!

நிறுவனம்: எம்.ஆர்.பி எனப்படும் தமிழக அரசின் மெடிக்கல் சர்வீசஸ் ரெக்ரூட்மென்ட் போர்டு
வேலை: பார்மசிஸ்ட்
காலியிடங்கள்: மொத்தம் 229. இதில் ஆங்கில மருந்தியல் துறையில் 148, ஆயுர்வேதா 38, ஓமியோபதி 23, யுனானி 20 காலியிடங்கள் உள்ளன
கல்வித்தகுதி: அந்தந்தத் துறையில்
பார்மசியில் டிப்ளமோ படிப்பு
வயது வரம்பு: பொதுப்பிரிவினர் 18 முதல் 40 வரை இருத்தல்வேண்டும். பிற பிரிவினர் 57 வயது வரைக்கும்கூட இருக்கலாம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 5.3.18
மேலதிக தகவல்களுக்கு: www.mrb.tn.gov.in

யு.பி.எஸ்சி. மூலம் வனத்துறை அதிகாரி பணி!

நிறுவனம்: மத்திய அரசுப் பணியாளர்
தேர்வாணையமான யு.பி.எஸ்.சி இண்டியன் ஃபாரஸ்ட் சர்வீஸ் எனும் தேர்வு மூலம் ஐ.எஃப்.எஸ் அதிகாரிகளைத் தேர்வு செய்யும் அறிவிப்பு
வேலை: ஐ.எஃப்.எஸ். எனப்படும் வனத்துறை அதிகாரிகள்
காலியிடங்கள்: மொத்தம் 110
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
வயது வரம்பு: 21 முதல் 31 வரை. சில
பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
தேர்வு முறை: பிரிலிமினரி எனும் முதற்கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் மெயின் எனும் முதன்மை எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 6.3.18
மேலதிக தகவல்களுக்கு: www.upsconline.nic.in

தொகுப்பு: டி.ரஞ்சித்