அடடே...ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!
மொழி
ஆனஸ்ட்VS ஹானஸ்ட்
வேலையில் ஆழ்ந்திருந்த ரகுவை பார்த்து விஷ் பண்ண வந்த ரவியிடம், “பொய்மையும் வாய்மை இடத்த புரை தீர்த்த நன்மை பயக்கும் எனின்’ அப்படின்னு வள்ளுவர் சொல்றார். நீ இது வரை எதாவது பொய் சொல்லி இருக்கியா ரவி?” என்று கேட்டார் ரகு. சற்றே தர்மசங்கடத்துடன் அவரைப் பார்த்த ரவி, “ஹானஸ்ட்லி ஸ்பீக்கிங்…. என் சுயநலத்துக்கு நான் பொய் சொன்னதில்லைங்க சார்” என்றான்.
இதைக் கேட்டு, “தப்பு ரவி…” என்ற ரகுவை இடை மறித்த ரவி, “எதுங்க சார் தப்பு..? பிறர் நலன் கருதி பொய் பேசுவதா?” என்றான்.உடனே ரகு, “You mistook…. நான் தப்புன்னு சொன்னது உன்னுடைய (Honestly) ‘ஹானஸ்ட்லி’ என்ற வார்த்தையின் தவறான உச்சரிப்பைத்தான்” என்றார்.‘‘Honest என்ற வார்த்தையில் H என்ற எழுத்து சைலன்ட்.
அதற்கு உச்சரிப்பு கிடையாது. எனவே, ‘ஹானஸ்ட்’ என்று உச்சரிப்பது தவறு. ‘ஆனஸ்ட்’ என்றுதான் உச்சரிக்க வேண்டும்” என்று சொன்ன ரகுவை சற்று விநோதமாக பார்த்த ரவி, “ஆச்சரியமா இருக்குங்க சார். ஆனா நிறைய பேர்….. ஏன் நம்ம MD கூட ‘ஹானஸ்ட்’-ன்னு சொல்லியிருக்காரு. நானும் நிறைய தடவை கேட்டிருக்கேன் சார்” என தன் சந்தேகத்தை வெளிப்படுத்தினான்.
“ஆமா ரவி! நானே பல முறை கேட்டிருக்கேன். அவரு நம்ம பாஸ் ஆச்சே. அவருடைய தவறை நான் எடுத்துச் சொன்னா ஏத்துக்குவாரோ, மாட்டாரோ என்ற அச்சம் எனக்கு உண்டு. ஆனா நீ என்னுடய உதவியாளன். அது மட்டுமல்ல. சரியான ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ள உன்னிடம் ஆர்வம் உள்ளது. அதனாலதான் நான் உன் கிட்ட ஃப்ரியா என் கருத்தைச் சொல்ல முடியுது” என்றார் ரகு.
விளக்கம் தந்த ரகுவிடம், “அப்படின்னா hospital-ஐ ஹாஸ்பிடல்னு சொல்லணுமா? அல்லது ஆஸ்பிடல்னு சொல்லணுங்களா சார்?” என்றான் ரவி.“H என்ற எழுத்து எல்லா இடத்திலும் சைலன்ட் கிடையாது. எந்தெந்த வார்த்தைகளில் அது சைலன்ட் தெரியுமா? HOUR (அவ) HONOUR, (ஆன) HONEST (ஆனஸ்ட்), HEIR (எய), CHOIR, (கய) CHORUS (கோரஸ்), ECHO (எக்கோ), VEHICLE,(வேகில்)…… மத்த வார்த்தைகளில் வருகிற ‘ஹெச்’க்கெல்லாம் உச்சரிப்பு உண்டு. சரியா?” என்று தெளிவுபடுத்திய ரகுவை பார்த்த ரவி, “யெஸ் யுவர் ஆனர்” என்றபடி ஒரு சல்யுட் அடித்துவிட்டு தன் இருக்கைக்குச் சென்றான்.
சேலம் ப.சுந்தர்ராஜ்
|