வேலை ரெடி!
வாய்ப்புகள்
வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலை வாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...
சுரங்கத்துறை படிப்புக்கு மைனிங் சிர்தார் பணி!
நிறுவனம்: பாரத் கோக்கிங் கோல் லிமிடெட்( ஜார்கண்ட்) வேலை: ஓவர்மேன் மற்றும் மைனிங் சிர்தார் எனும் இரு துறைகளில் வேலை காலியிடங்கள்: 721 கல்வித்தகுதி: முதல் வேலைக்கு மைனிங் துறையில் டிப்ளமோ படிப்புடன் ஓவர்மேன் துறை தொடர்பாக அரசு நிறுவனத்தில் சான்றிதழ் படிப்பும், இரண்டாம் வேலைக்கு மைனிங் சிர்தார் துறையில் சான்றிதழ் படிப்பும் தேவை. வயது வரம்பு: 18-30. சில பிரிவினருக்கு வயதுத் தளர்வு உண்டு. தேர்வு முறை: எழுத்துத் தேர்வு விண்ணப்பிக்க கடைசித் தேதி: 31.1.17 மேலதிக தகவல்களுக்கு: www.bccl.gov.in தென்னக ரயில்வேயில் அப்ரண்டீஸ் ஆகலாம்!
நிறுவனம்: தென்னக ரயில்வேயில் அப்ரண்டீஸ் எனும் பயிற்சியாளர் வேலை(கோவை) காலியிடங்கள்: 148 வேலை: ஃபிட்டர் 61, வெல்டர் 15, டர்னர் 6, மெஷினஸ்ட் 6, எலக்ட்ரீஷியன் 28, மெக்கானிக்கல் டீசல் 34, கார்பெண்டர் 1 மற்றும் மெடிக்கல் லேபாரட்டரி 4 கல்வித்தகுதி: +2 மற்றும் ஐ.டி.ஐ படிப்பு வயது வரம்பு: 15-24. சில பிரிவினருக்கு வயதில் தளர்வு உண்டு தேர்வு முறை: 10வது மற்றும் ஐ.டி.ஐ தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் பணி விண்ணப்பிக்க கடைசித் தேதி: 25.1.17 மேலதிக தகவல்களுக்கு: www.sr.indianrailways.gov.in
பட்டதாரிகளுக்குத் தேசிய புலனாய்வு நிறுவனத்தில் வேலை!
நிறுவனம்: நேஷனல் இன்வெஸ்டிகேடிவ் ஏஜென்சி வேலை: இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் அசிஸ்டென்ட் பணிகள் காலியிடங்கள்: 111 கல்வித்தகுதி: ஏற்கனவே மத்திய மாநிலப் புலனாய்வுப் பணிகளில் இருப்பவர்கள், கூடுதலாக டிகிரி படிப்பு தேவை வயது வரம்பு: 56 தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 23.1.17 மேலதிக தகவல்களுக்கு: www.nia.gov.in +2 முடித்தவர்களுக்கு அணுமின் நிலையத்தில் வேலை
நிறுவனம்: பாபா அட்டாமிக் ரிசர்ச் சென்டர்(கல்பாக்கம்) வேலை: ஸ்டைஃபண்டரி டிரெயினி, டெக்னீஷியன்(சி பிரிவு) மற்றும் அப்பர் டிவிஷன் கிளார்க் எனும் 3 துறைகளில் வேலை காலியிடங்கள்: முதல் துறையில் 86, இரண்டாம் துறையில் 3, மூன்றாம் துறையில் 10 காலியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: +2வில் அறிவியல் படிப்பு, ஐ.டி.ஐ படிப்பு மற்றும் இளங் கலைப் படிப்பு வயது வரம்பு: 18-27 தேர்வு முறை: எழுத்து மற்றும் திறன் தேர்வு விண்ணப்பிக்க கடைசித் தேதி: 31.1.17 மேலதிக தகவல்களுக்கு: www.barc.gov.in 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ராணுவத்தில் வேலை
நிறுவனம்: ஹெட் கோர்ட்டர்ஸ் மெட்ராஸ் எஞ்சினியர் குரூப் அண்டு சென்டர் (பெங்களூர்) வேலை: பூட் மேக்கர், பார்பர், டெய்லர் உட்பட 11 பிரிவுகளில் வேலை காலியிடங்கள்: 249 கல்வித்தகுதி: 10, +2 படிப்புடன் டைப்பிங், ஐ.டி.ஐ படிப்பு வயது வரம்பு: 18-25 தேர்வு முறை: எழுத்து மற்றும் தொழில்திறன் தேர்வு விண்ணப்பிக்க கடைசித் தேதி: 18.1.17 மேலதிக தகவல்களுக்கு: www.indianarmy.nic.in டிப்ளமோ படித்தவர்களுக்குக் கால்நடைத்துறையில் வேலை
நிறுவனம்: டிபார்ட்மென்ட் ஆஃப் அனிமல் ஹஸ்பெண்ட்ரி(உத்தரகாண்ட்) வேலை: கால்நடை மருந்தியல் நிபுணர் காலியிடங்கள்: 116. இதில் பொதுப்பிரிவினர் 61, எஸ்.சி 29, எஸ்.டி 10 மற்றும் ஓ.பி.சி 16 காலியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: கால்நடை மருந்தியல் டிப்ளமோ வயது வரம்பு: 18-42 விண்ணப்பிக்க கடைசித் தேதி: 23.1.16 மேலதிக தகவல்களுக்கு: www.ahd.uk.gov.in
|