மத்திய அரசில் உதவியாளர் பணி : 8300 பேருக்கு வாய்ப்பு



வாய்ப்புகள்

மத்திய அரசின் காலிப்பணியிடங்களைப் பொது எழுத்துத் தேர்வு நடத்தி அதன் மூலம் நிரப்புவதற்காக உருவாக்கப்பட்டதுதான் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் அமைப்பு. தற்போது பல்வேறு மாநிலங்களிலும் உள்ள மத்திய அரசின் பலதரப்பட்ட துறைகளில் ஏற்பட்டுள்ள குரூப் ‘C’ Multi Tasking (Non-Technical) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில் 8300 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகத்துக்கு 453 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இனி கல்வித்தகுதி, வயதுவரம்பு உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம்.சம்பள விவரம்: பேபேண்ட் - ரூ.5200-20200+கிரேடு பே ரூ.1800கல்வித்தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

வயதுவரம்பு: பணிகளைப் பொருத்து அதிகபட்ச வயது வரம்பு 27 வயதிலிருந்து 32 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓ.பி.சி. பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். இன்னும் சில குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

தேர்வு செய்யும் முறை: இப்பணியில் சேர விரும்புபவர்களுக்கு எழுத்துத் தேர்வும் அதையடுத்து நேர்முகத் தேர்வும் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.எழுத்துத் தேர்வில் இரண்டு தாள்கள் உள்ளன. முதல் தாளில் அப்ஜெக்டிவ் டைப் கேள்விகள் கேட்கப்படும். இரண்டாம் தாள் டெஸ்க்ரிப்டிவ் டைப்பில் இருக்கும். முதல் தாளில் ஜெனரல் இன்டலிஜென்ஸ் அண்டு ரீசனிங், ஜெனரல் அவேர்னெஸ், ஜெனரல் இங்கிலீஷ், நியூமரிக்கல் ஆப்டிடியூட் ஆகிய பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும் மதியம் 2 மணி முதல் 4 மணி வரையிலும் என இரு வேளையும் நடைபெறும் இத்தேர்வுக்கு மொத்த மதிப்பெண்கள் 150. தவறான விடைக்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.முதல் தாளில் தகுதி பெறுபவர்கள்தான் இரண்டாவது தாளை எழுத அனுமதிக்கப்படுவர். இரண்டாம் தாள் தேர்வு எப்போது நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும். இரண்டாம் தாள் தேர்வில் ஆங்கிலம் அல்லது ஏதாவது ஒரு மாநில மொழியில் கட்டுரை மற்றும் கடிதம் எழுத வேண்டும். இத்தேர்வு 30 நிமிடங்களே நடைபெறும். 50 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

முதல் தாளிலும் இரண்டாம் தாளிலும் தகுதி பெறுபவர்கள், அடுத்தகட்டமாக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் முதலில் www.ssconline.nic.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும். அதில் Multi Tasking(Non - Technical) Staff in different States/UTs, 2016 என்பதன் கீழ் உள்ள அப்ளை பட்டனை ‘கிளிக்’ செய்யவும்.

இதுவரை எஸ்.எஸ்.சி. தேர்வை எழுதாதவர் என்றால் ONE TIME REGISTRATION என்னும் பெயர்ப் பதிவை செய்துகொள்ள வேண்டும். பின்பு SUBMIT பட்டனை அழுத்தவும். close பட்டனை அழுத்தினால் நீங்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்த அனைத்துத் தகவல்களும் அழிந்துவிடும். சரியாகப் பதிவு செய்தால் உங்களுக்கான USER ID மற்றும் PASSWORD ஆகியவற்றைப் பெறலாம். இதன் பின் உங்களது போட்டோ மற்றும் கையெழுத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

உங்கள் புகைப்படம் ஸ்கேன் செய்யும்போது, அதன் அளவு 4 KB முதல் 12 KB வரை இருக்க வேண்டும். 100x120 என்ற பிக்சல் அளவை கொண்டிருப்பதும் முக்கியம். இது போலவே கையெழுத்தானது 1 KB முதல் 12 KB அளவைக் கொண்டிருக்க வேண்டும். 40x60 பிக்சல் அளவாகவும் இருக்க வேண்டும். இதுவரை பதிவு செய்த தகவல்களில் எதுவும் தவறு இருந்தால் VIEW /EDIT லிங்கில் அதைச் சரிசெய்துகொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்: தேர்வு எழுத விரும்பும் பொதுப் பிரிவினர் ரூ.100 ஐ விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் அல்லது ஆஃப் லைனிலும் செலுத்தலாம். ஆன்லைனில் செலுத்த நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலமாகச் செலுத்தலாம். ஆஃப் லைனில் செலுத்த சலானை டவுன்லோடு செய்து செலுத்த வேண்டும்.

இதை ஸ்டேட் வங்கியில் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.மேலும் முழு விவரங்களை அறிய விரும்புவோர் மேலே குறிப்பிட்டுள்ள எஸ்.எஸ்.சி-ன் இணையத்தளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.1.2017

- எம்.நாகமணி