துணை ராணுவப் படையில் ஹெட் கான்ஸ்டபிள் பணி!
வாய்ப்புகள்
872 பேருக்கு வாய்ப்பு
இந்திய ராணுவத்தில் பல்வேறு துணை ராணுவப் படைகள் உள்ளன. ஒவ்வொரு துணை ராணுவப்படைக்கும் பாதுகாப்பு சார்ந்த தனித்தனி பொறுப்புகள் உள்ளன. இவற்றில் ஒன்றுதான் சசாஸ்திர சீமா பல் அல்லது எஸ்.எஸ்.பி. என்பது. உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த அமைப்பில் தற்போது காலியாக உல்ள 872 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கம்யூனிகேஷன் துறை சார்ந்த துணை ஆய்வாளர் பிரிவில் 16 இடங்கள், இதே துறை சார்ந்த உதவி துணை ஆய்வாளர் பிரிவில் 110 இடங்கள், இதே துறை சார்ந்த ஹெட் கான்ஸ்டபிள் பிரிவில் 746 இடங்கள் என மொத்தம் 872 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.வயதுவரம்பு: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி சில குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு உண்டு.
கல்வித்தகுதி: சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன் ஆகிய பிரிவுகளில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களுடன் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
அசிஸ்டென்ட் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன் ஆகிய பிரிவுகளில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களுடன் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். ஹெட் கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் +2 அளவிலான படிப்பை இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களுடன் முடித்திருக்க வேண்டும் அல்லது ஐ.டி.ஐ., படிப்பை எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் முடித்திருக்க வேண்டும்.
உடல்தகுதி: உயரம் குறைந்த பட்சம் 170 செ.மி., இருக்க வேண்டும். இதற்கு ஏற்ற எடையும் இருக்க வேண்டும். மார்பளவு குறைந்தபட்சம் 80 செ.மி., விரிவடையும் தன்மையில் குறைந்தபட்சம் 5 செ.மி., பெற்றிருக்க வேண்டும். கண்ணாடி அணிந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. இவை தவிர இதர மருத்துவத் தகுதித் தேவைகளும் உள்ளன.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மூலமாகத் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு ரூ.200ம், இதர பதவிகளுக்கு ரூ.100ம் விண்ணப்பக் கட்டணமாக இந்திய அஞ்சல் ஆணை அல்லது டி.டி. மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க: பரிந்துரைக்கப்பட்ட மாதிரி யிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பப் படிவத்துடன் 11.5 செ.மி.x 27.5 செ.மி. அளவுள்ள சுய முகவரியிட்ட ரூ.25 மதிப்பிலான அஞ்சல் தலை ஒட்டிய 2 அஞ்சல் உறையையும் வைத்து அனுப்ப வேண்டும்.
Sub Inspector / Head Constable Inspector General, Frontier HQ SSB, Ganiadeoli, Ranikhet, District : Almora (UK) Pin No. 263645 Asst. Sub InspectorInspector General, Frontier HQ SSB, Guwahati, House No.345, Nikita Complex, G.S. Road, Khanapara, PO/PS : Khanapara, District : Kamrup, Guwahati (Assam), Pin. No : 781022. விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.1.2017 மேலும் விவரங்களுக்கு: www.ssb.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
|