விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் படிக்க JEE MAIN-2017 நுழைவுத்தேர்வு
நுழைவுத்தேர்வு
விண்வெளி ஆய்வு மற்றும் விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பான கல்வியை ‘இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி’ (Indian Institute of Space Science and Technolgy-IIST) வழங்கிவருகிறது. இந்தக் கல்வி நிறுவனம் 2017ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்நிறுவனம் விண்வெளி தொடர்பான இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டப்படிப்புகளைத் தருவதுடன், இத்துறைகளைச் சார்ந்த ஆய்வினையும் மேற்கொள்கிறது. இந்தியப் பல்கலைக்கழகங்களில் எட்டாவது தர வரிசையில் உள்ள இந்நிறுவனம் மத்திய அரசின் விண்வெளித் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சிக் கல்வி நிறுவனமாகும். இது திருவனந்தபுரத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் வலியமலா என்ற இடத்தில் உறைவிடக் கல்வி நிறுவனமாக இயங்குகிறது.
IIST ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பல்கலைக்கழக விண்வெளி ஆய்வு அமைப்பான USRA (Universities space Research Association) மற்றும் கலிஃபோர்னியா தொழில்நுட்ப நிறுவனமான Caltech (California Institute of Technology) ஆகியவற்றுடன் கல்வி, பயிற்சி ஆகியவற்றில் புரிந்துணர் ஒப்பந்தம் செய்துள்ளது. இப்படிப்பில் சாதிக்கும் மாணவர்கள் கேல்டெக்(Caltech)-ல் 9 மாதப் பயிற்சிக்கு சிபாரிசு செய்யப்படுவார்கள்.
இங்கு வழங்கப்படும் படிப்புகள் இளநிலைப் பட்டப்படிப்பு: 4 ஆண்டுக் கால பி.டெக் (ஏரோஸ்பேஸ் எஞ்சினியரிங் - Aerospace Engineering) 60 இடங்கள், 4 ஆண்டுக் கால பி.டெக் (அவியோனிக்ஸ்-Avionics) 60 இடங்கள், 5 ஆண்டுக் கால பி.டெக் / எம்.எஸ். / எம்.டெக் / டியூவல் (Dual degree) பட்டப்படிப்பு 20 இடங்கள்.
முதுநிலைப் பட்டப்படிப்பு: M.S. படிப்புகள் Astronomy & Astrophysics, Earth System Sciences, Solid State Physics ஆகிய பாடங்களிலும், M.Tech படிப்பு Optical Engineering என்ற பாடத்திலும் வழங்கப்படுகின்றன.கல்வித்தகுதி: +2வில் இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்கள் உள்ள பிரிவை எடுத்துப் படித்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினராயின் குறைந்தது 70 % மதிப்பெண்களும், எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறைந்தது 60% மதிப்பெண்களும் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பொதுப் பிரிவினர் 1.10.1992 அல்லது அதற்குப் பின்னும் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிகள் 1.10.1987 அல்லது அதற்குப் பின் பிறந்திருக்க வேண்டும்.
IIST - நிறுவனத்தில் சேர்ந்து படிக்க, மாணவர்கள் சென்ட்ரல் போர்ட் ஆஃப் செகண்டரி எஜூகேசன் (Central Board of Secondary Education - CBSE) நடத்தும் JEE - Main 2017 தேர்வில் தேர்ச்சி பெற்று, இதைத் தொடர்ந்து இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி நடத்தும் JEE - Advanced தேர்வையும் எழுதித் தேர்ச்சி பெற வேண்டும்.
JEE - Advanced தேர்வில் பொதுப் பிரிவினர், இயற்பியல், வேதியியல், கணிதம் கூட்டுச் சராசரி 20% அதாவது, 372 மதிப்பெண்ணிற்கு 74 மதிப்பெண்களும், ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 5 விழுக்காடு அதாவது, 124 மதிப்பெண்களுக்கு 6 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர், இப்பாடங்களில் குறைந்தது 18% அதாவது, 372 மதிப்பெண்களுக்கு 66 மதிப்பெண்கள் மற்றும் ஒவ்வொரு பாடத்திலும் 4½ % அதாவது, 124 மதிப்பெண்களுக்கு 5 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிகள் இப்பாடங்களில் குறைந்தது 10% அதாவது, 372 மதிப்பெண்களுக்கு 37 மதிப்பெண்கள் மற்றும் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 2-1/2% அதாவது, 124 மதிப்பெண்களுக்கு 3 மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.IISTயில் சேர விரும்புவோர் கவனத்துக்கு: முதலில் http : wwwjee main.nic.in என்ற இணையதளத்திற்குச் சென்று, JEE - Main தேர்விற்கு விண்ணப்பித்தாக வேண்டும். JEE மெயின் தேர்விற்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 2.4.2017.
JEE மெயின் தேர்வில் தகுதி பெற்றபின் www.jeeadv.ac.in என்ற இணையதளம் வழியாக 28.4.2017 முதல் 2.5.2017 வரை JEE.Advanced தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். இதற்குப் பின்னர் 30.4.2017 அன்று மீண்டும் வெளியாகும் IIST அறிவிப்பை www.iist.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து 22.5.2017 முதல் 12.6.2017 வரை ஏதேனும் ஒரு நாளில் விண்ணப்பிக்க வேண்டும்.
உதவித்தொகை: ஒவ்வொரு செமஸ்டருக்கும் மத்திய அரசின் விண்வெளித் துறை, கல்விக் கட்டணத்திற்கான உதவியையும், தவிர நூல்கள் வாங்க ரூ.3000 தந்து உதவுகிறது.தகுதியுள்ள மாணவர்கள் படிப்பிற்குப் பின், இருக்கின்ற காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப, இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (Indian Space Research Organisation / ISRO) மற்றும் அறிவியல் துறை (Department of Science) இவற்றில் அறிவியல் ஆய்வாளர்கள் மற்றும் பொறியாளர் பதவியில் அமர்த்தப்படுவார்கள்.
இடஒதுக்கீடு: இப்படிப்பிற்கு, அரசு விதிகளின்படி எஸ்.சி-க்கு 15%, எஸ்.டி-க்கு - 7.5%, பி.சி-க்கு 27%, மாற்றுத்திறனாளிகளுக்கு 3% உண்டு. மேலும் விவரங்களுக்கு: Indian Institute of Space Science and Technology (Dept. of Space, Govt. of India) Valiamala, Thiruvananthapuram-695 547 Kerala, India. www.iist.ac.in Ph : 0471 - 2568452, 2568600
ஆர்.ராஜராஜன்
|