டிப்ளமோ முடித்தவர்களுக்கு நிலக்கரி நிறுவனத்தில் வேலை!
வாய்ப்புகள்
332 பேருக்கு வாய்ப்பு
தென்கிழக்கு மண்டல நிலக்கரி நிறுவனம் சுருக்கமாக எஸ்.இ.சி.எல். என்று அழைக்கப்படுகிறது. இது மத்திய சுரங்கத்துறையின் கீழ் செயல்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் மைனிங் சிரதார், டி அண்ட் எஸ் போன்ற கிரேடு-சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 332 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இடஒதுக்கீடு வாரியாக, பொதுப் பிரிவினர் - 167 இடங்கள், ஓ.பி.சி. - 43 இடங்கள், எஸ்.சி. - 46 இடங்கள், எஸ்.டி. - 76 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்து பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மைனிங் சர்தார், மைன் சர்வேயிங் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். முதலுதவி பயிற்சி மற்றும் கேஸ் டெஸ்டிங்கில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 30-9-2016 தேதியில் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஆகியோருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்புத் தளர்வு அனுமதிக்கப்படும்.தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 20-9-2016.
பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து தேவையான சான்றுகள், புகைப்படம் இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். நகல் விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் 30-9-2016. விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:General Manager (Manpower), South Eastern Coalfields Limited, Post Box No.60, Seepat Road, Billaspur, Chhatisgarh, Pin - 495006.விண்ணப்பிக்கும் முறை மற்றும் கட்டணம் குறித்த விரிவான விவரங்களைத் தெரிந்துகொள்ள www.secl.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.
|