மீன்வளப் பல்கலைக்கழகத்தில் M.F.Sc., Ph.D. படிக்கலாம்!



நுழைவுத்தேர்வு

நாகப்பட்டினத்தில் இருக்கும் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் வழங்கும் முதுநிலை மீன்வள அறிவியல் (M.F.Sc. - Master of Fisheries Science), மற்றும் மீன்வள அறிவியல் முனைவர் (Ph.D) படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.முதுநிலை மீன்வள அறிவியல் பட்டம்: தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின்கீழ் தூத்துக்குடி மற்றும் பொன்னேரியில் செயல்பட்டுவரும் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனங்களிலும், தூத்துக்குடியிலுள்ள கல்லூரியிலும் Aquaculture - 6, Aquatic Animal Health - 4, Aquatic Environment Management - 3, Fisheries Economics - 3, Fisheries Engineering and Technology - 3,  Fisheries Extension - 3, Fish Processing Technology - 3, Fisheries Resource Management - 3, Fish Quality Assurance and Management - 5, Fish Biotechnology - 4 என்று மொத்தம் 10 பிரிவுகளில் முதுநிலை மீன்வள அறிவியல் (M.F.Sc) படிப்பிற்கு 37 இடங்கள் இருக்கின்றன. பொன்னேரியிலுள்ள கல்லூரியில் Aquaculture எனும் பிரிவில் மட்டும் 4 இடங்கள் இருக்கின்றன.

கல்வித்தகுதி: முதுநிலை மீன்வள அறிவியல் (M.F.Sc) படிப்பிற்கு விண்ணப்பிக்க தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் வழங்கிய நான்காண்டு கால அளவிலான இளநிலை மீன்வள அறிவியல் (B.F.Sc) பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பட்டப் படிப்பில் 65% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

மொத்தமுள்ள இடங்களில் 75% இடங்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்காகவும், 25% இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத இடங்கள், பின்னர் மாநில ஒதுக்கீட்டில் நிரப்பப்படும். இளநிலை மீன்வள அறிவியல் பட்டப் படிப்பை வேறு மாநிலங்களில் படித்த தமிழ்நாட்டு மாணவர்கள் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்க, இருப்பிடச் சான்றிதழைப் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவர் தேர்வு முறை: முதுநிலை மீன்வள அறிவியல் (M.F.Sc) படிப்பிற்கான மாணவர் சேர்க்கை, கீழ்க்காணும் அட்டவணையில் கண்ட மதிப்பெண்களின் அடிப்படையில் இருக்கும்.

எண்    விவரம்    மதிப்பெண்
1    நுழைவுத்தேர்வு    100
2    கல்வித்தகுதி    90
3       கல்விக்கான பதக்கம்/விருது 5
4    பணி அனுபவம்    5
மொத்தம்    200

எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்கள் குறைந்தது நுழைவுத்தேர்வில் 40% மதிப்பெண்களும், பிற பிரிவினர் 50% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். தகுதி வாய்ந்த மாணவர்கள் மட்டும் தகுதிகளின் அடிப்படையில் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்.மீன்வள அறிவியல் முனைவர் பட்டம்: தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தில் Aquaculture - 3, Aquatic Animal Health - 2, Aquatic Environment Management - 2, Fisheries Economics - 3, Fisheries Extension - 2, Fish Processing Technology - 2,  Fisheries Resource Management - 3, Fish Quality Assurance and Management - 3 என்று மொத்தம் 8 பிரிவுகளில் மீன்வள அறிவியல் முனைவர் (Ph.D) பட்டத்திற்கான படிப்பிற்கு 20 இடங்கள் இருக்கின்றன. பொன்னேரியிலுள்ள கல்லூரியில் Aquaculture எனும் பிரிவில் மட்டும் 4 இடங்கள் இருக்கின்றன.

 கல்வித்தகுதி: மீன்வள அறிவியல் முனைவர் படிப்பிற்கான அனைத்து இடங்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இளநிலை மீன்வள அறிவியல் (B.F.Sc) மற்றும் முதுநிலை மீன்வள அறிவியல் (M.F.Sc) பட்டப்படிப்பை வேறு மாநிலங்களில் படித்த தமிழ்நாட்டு மாணவர்கள் இருப்பிடச் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்த இடங்களில் சேராமல் ஏற்படும் காலியிடங்கள் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டு நிரப்பப்படும்.

முனைவர் பட்டத்தின் ஒவ்வொரு பிரிவிற்கும், அதற்கான சிறப்புப் (Specialization) பாடங்களைக் கொண்ட முதுநிலை மீன்வள அறிவியல் (M.F.Sc) படிப்பில் 65% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.மாணவர் தேர்வு முறை: மீன்வள அறிவியல் முனைவர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை, கீழ்க்காணும் அட்டவணையில் கண்ட மதிப்பெண்களின் அடிப்படையில் இருக்கும்.

எண்     விவரம்     மதிப்பெண்
1     நுழைவுத்தேர்வு       40
2     கல்வித்தகுதி       40
3     வெளியீடுகள்       10
4     கல்விக்கான
         பதக்கம் / விருது  5
5    பணி அனுபவம்       5
மொத்தம்              100

எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்கள் நுழைவுத்தேர்வில் குறைந்தது 40% மதிப்பெண்களும், பிற பிரிவினர் 50% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: மேற்காணும் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் http://tnfu.ac.in/ எனும் இணையத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.500, பிற பிரிவினர் ரூ.1000 விண்ணப்பக் கட்டணமாக ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க கடைசி நாள்: 21-9-2016.

இணையத்தில் சமர்ப்பித்த விண்ணப்பத்தைப்  பிரின்ட் அவுட் எடுத்து  தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, ‘The Chairman, PG Admission Committee, Tamil Nadu Fisheries University, Nagapattinam-611001’ எனும் முகவரிக்கு சென்றடையும்படி அனுப்பி வைக்க கடைசி நாள் 26.9.2016.

நுழைவுத்தேர்வு: விண்ணப்பித்தவர்களில் தகுதியுடையவர்களுக்கு மின்னஞ்சல் வழியாக நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் அனுப்பப்படும். அனைத்துத் தொடர்புகளும் மின்னஞ்சல் வழியில் மட்டுமே இருக்கும். நுழைவுத்தேர்வு 29.9.2016 அன்று நடைபெறும்.
கூடுதல் விவரங்களை அறிய மேற்காணும் இணையதளத்தைப் பார்க்கலாம். அல்லது pgadmission@tnfu.org.in எனும் மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 04365 - 240558 எனும் தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு தகவல் பெறலாம்.

 - தாமரைச்செல்வி