முடிவு



‘‘என்ன அநியாயமா இருக்கு சுரேஷ்! பத்து மணி நேரம் குழந்தையப் பாத்துக்க வர்ற வேலைக்காரிக்கு மாசம் ஐந்நூறு டாலர் சம்பளம் தரணுமாம்!’’ - ரேஷ்மா சொன்னாள்.‘‘இப்படி வேலைக்காரிக்கு தண்டமா காசு கொடுக்கிறதுக்குப் பதிலா உங்க அம்மாவையே அமெரிக்காவுக்கு அழைச்சிக்கிட்டு வந்துட்டா என்ன?

’’ என ஐடியா சொன்னான் சுரேஷ்.‘‘அவங்க வந்துட்டா அப்புறம் ஊர்ல எங்கப்பாவை யார் கவனிக்கிறது? ஏன்... உங்க அம்மாகூட சும்மாதானே இருக்காங்க. அவங்களை அமெரிக்காவுக்கு அழைச்சிக்கிட்டு வந்தா என்ன?’’

‘‘அப்படின்னா எங்கப்பாவை கவனிக்கிறது யார்?’’இந்த இழுபறியில் ரெண்டுங்கெட்டான் நிலைமையே நீடித்தது.‘‘வேற வழியே இல்ல... உங்க அப்பா அம்மா, எங்க அப்பா அம்மான்னு யாரையும் கஷ்டப்படுத்த வேண்டாம்.

 வேலைக்காரி ஏற்பாடு பண்ணிக்கறதுதான் பெஸ்ட்!’’ - முடிவாகச் சொன்னான் சுரேஷ்.
‘‘ஓகே... எனக்கு ஒண்ணும் பிரச்னையில்ல சுரேஷ். ஆனா, அதுக்கு பட்ஜெட் எப்படி அட்ஜெஸ்ட் பண்ணப் போறோம்னு யோசி.

ஊருக்கும் போன் பண்ணிப் பேசு. குழந்தைய பார்த்துக்கப்போறது உங்க அம்மாவா, எங்க அம்மாவா, இல்ல வேலைக்காரியாங்கிறதை முதல்ல முடிவு பண்ணிட்டு, அதுக்குப் பிறகு எப்ப குழந்தை பெத்துக்கலாம்ங்கிறதப் பத்தி யோசிக்கலாம். ஓகேவா?’’ என்றபடி ரேஷ்மா சிரிக்க, சுரேஷ் யோசிக்க ஆரம்பித்தான்!              

ஜெய தமிழண்ணா