நியூஸ் வே



‘ருத்ரமாதேவி’யில் இளவரசிகளாக கேக்தரின் தெரஸாவும், நித்யா மேனனும் நடித்திருக்கின்றனர். அனுஷ்காவை விடவும், இந்த இளவரசிகள்தான் படத்தை எதிர்நோக்கி அதிகம் காத்திருக்கிறார்கள். நித்யா மேனனின் நடிப்பில் அனுஷ்காவே அதிசயித்துப் போயிருக்கிறாராம்.

கார்த்திக் சுப்புராஜின் ‘இறைவி’ ஷூட்டிங்கில் எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்த நாள் தெரிய வர, பிரமாண்ட கேக் வரவழைத்து கொண்டாடிவிட்டார்கள்.

‘சத்ரியன்’ படம் சில மாற்றங்களுடன் அட்லி டைரக்‌ஷனில் உருவாகி வருகிறது. அதில் திலகன் நடித்த ரோலில் பாரதிராஜா, சத்யராஜ் இருவருமே நடிக்க மறுத்துவிட்டார்கள். கடைசியில் டைரக்டர் மகேந்திரன் நடிக்கிறார். மகேந்திரன் சார்... நீங்க வில்லனா?

‘‘எல்லாப் பிரச்னையும் ‘ரஜினி முருகன்’ வந்துவிட்டால் தீர்ந்து விடும்’’ என உறுதி அளித்திருக்கிறார் டைரக்டர் லிங்குசாமி. அதனால் உற்சாகமாகி இருக்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

காங்கிரஸ் சார்பில் ரம்ஜானை முன்னிட்டு தரப்பட்ட இஃப்தார் விருந்தில் சோனியா காந்தியோடு செல்ஃபி எடுக்க சிலர் முயன்றபோது தடுத்துவிட்டார் சோனியா. ‘‘செல்ஃபி எல்லாம் நரேந்திர மோடிக்கு மட்டும்தான்’’ என சிரித்தபடி சொன்னார். அப்புறம் அவர்கள் போய் ராகுல் காந்தியோடு செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

‘ஷமிதாப்’ சரியாகப் போகாத கவலையைத் தூக்கி ஓரம் வைத்துவிட்டு அடுத்த படம் இயக்க ரெடியாகிவிட்டார் இயக்குநர் பால்கி. அனேகமாக அதில் கரீனா கபூர் ஹீரோயினாக இருக்கலாம். ‘‘அமிதாப் இல்லாமல் என் படங்கள் இல்லை’’ என சிலாகிக்கிறார் பால்கி.

தங்கம் விலை குறைந்தது, தனுஷிற்கு ஹேப்பியாகிவிட்டது போல. ‘மாரி’ படத்தில் பணிபுரிந்த விஜய்ஜேசுதாஸ், ரோபோ சங்கர் எனப் பலரையும் அழைத்து தங்க செயின் அணிவித்து மகிழ்ந்திருக்கிறார்.

ஆர்யாவுக்கே பிரியாணி கொடுத்து அசத்தியிருக்கிறார் ஷாம். ரம்ஜான் ஸ்பெஷலாக ஷாம் அளித்த பிரியாணி விருந்தில் இயக்குநர் ஜனநாதன், நடிகர்கள் விஷ்ணு, பரத் என கலந்துகொண்டவர்கள் பட்டியல் பெரிது.

சிம்புவின் படத்தை முடித்த பிறகு அருண்விஜய்க்காக ஒரு படம் செய்கிறார் கெளதம் மேனன். வெயிட்... அது ஆக்‌ஷன் படமல்ல. ‘விடிவி’ மாதிரி அசல் காதல் படமாம்.

‘உங்களுக்கு பிடிச்ச ஹீரோயின்ஸ்?’’ என எமி ஜாக்‌சனிடம் லிஸ்ட் கேட்டால், கொஞ்சமும் யோசிக்காமல், ‘‘கோலிவுட்டில் ஸ்ருதிஹாசன், பாலிவுட்டில் மலைக்கா அரோரா, ஹாலிவுட்டில் விக்டோரியா பெக்காம்’’ என்கிறார் செம ஸ்பீடாக!

கோவை கொடீசியா வளாகத்தில் நடந்த ‘அக்ரி இண்டெக்ஸ் 2015’ கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த வாழைத்தார்கள் இவை. இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா? சுமார் 239 காய்கள், 14 சீப், 60 கிலோ எடை என்கிறது புள்ளி விவரம்... போதுமா?

அஜித் கொல்கத்தா ஷூட்டிங்கில் இருக்கிறார். ஸ்ருதிஹாசன் போட்டோ ஷூட்டைப் பார்த்த சூரி, தன்னையும் படம் எடுத்துத் தரும்படி கேட்டுக்கொண்டாராம். ‘சென்னையில் வைத்து படம் எடுத்துத் தருகிறேன்’ என பிராமிஸ் செய்திருக்கிறார் ‘தல’.

இது சாதாரண மண்டபம் அல்ல; மன்னார்குடி அருகே உள்ள மேலநாகையில் பாரதியார் தலைமறைவாக வாழ்ந்தபோது, தியானம் செய்த மண்டபம் இது. இதைப் புதுப்பிக்கும் பணி நிதிப் பற்றாக்குறையால் நிறைவடையாமல் நிற்கிறதாம். வறுமை கவிஞனின் உடன்பிறப்பா? மை காட்!

பாலிவுட் கனவு தகர்ந்து போயிருந்த தமன்னாவிற்கு, ‘பாகுபலி’ இந்தி வெற்றி உற்சாகம் அளித்திருக்கிறது. கனவும் ஆர்வமும் மீண்டும் உச்சத்தில்!